நேற்று ஆசியக் கோப்பையில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் ஆட்டநாயகன் விருது வென்ற அபிஷேக் சர்மா தன்னுடைய பேட்டிங் திட்டம் பற்றி கூறியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஆறு விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் எடுத்தது. இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா வழக்கம் போல அதிரடியாக விளையாடி 37 பந்துகளில் 75 ரன்கள் குவித்தார். தொடர்ந்து விளையாடிய பங்களாதேஷ் 127 ரன்னில் ஆல் அவுட் ஆக இந்திய அணி 41 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
முதல் பந்தே அடிக்க தோணும்
நேற்றைய போட்டி முடிவுக்கு பின் பேசிய அபிஷேக் ஷர்மா ” நான் என்னுடைய வேலையைத்தான் செய்கிறேன். நான் முன்பே சொல்லி இருந்த மாதிரி என்னுடைய பேட்டிங்கில் நான் என்னுடைய ஃப்ளோவை தொடர்ந்து போகிறேன். பந்து என்னுடைய வட்டத்தில் இருந்தால், அது முதல் பந்தாக இருந்தாலும் அடித்து விளையாடி பவர் பிளேவை அணியின் பக்கம் மாற்றுவேன்”
“சில போட்டிகளில் எனக்கு முதல் பந்தையே அடிக்க வேண்டும் என்று தோன்றும். சில பந்துவீச்சாளர்கள் முதல் பந்திலேயே விக்கெட் எடுக்க முயற்சி செய்வதை போல எனக்கும் இப்படி தோன்றும். ஆனால் இந்த போட்டியில் ஆடுகளம் புதிதாக இருந்தது. மேலும் ஸ்விங் மற்றும் சீம் இருந்தது. எனவே கொஞ்ச நேரம் பார்த்து விளையாடிவிட்டு பின்பு தாக்கி விளையாடலாம் என நானும் கில்லும் முடிவு செய்தோம்”
நான் சும்மா சுத்த மாட்டேன்
“எதிரணி பீல்ட் எப்படி வைத்திருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு ஷாட் செலெக்ஷன் செய்வேன். சில ஷார்ட் மீது அதிக நம்பிக்கை வைத்து இருப்பேன். அதேபோல நான் எல்லா பந்துக்கும் சும்மா ஆட மாட்டேன். எனக்கான பவர் எங்கிருந்து வருகிறது என்றால் பயிற்சியில் நான் இதற்காக வேலை செய்கிறேன். அங்கு கடுமையாக உழைப்பதன் மூலமாக என்னை மெருகேற்றிக் கொள்கிறேன்”
இதையும் படிங்க : 3வது இடத்தில் சிவம் தூபேவை அனுப்பி.. கம்பீர் எதிரணிகளுக்கு ஸ்ட்ராங்கா இதை சொல்ல விரும்புகிறார் – தினேஷ் கார்த்திக்
“நீங்கள் வலைப்பயிற்சியில் பந்தை அடித்து விளையாடும் பொழுது ஆட்டம் இழப்பதற்கு அதிகமான வாய்ப்புகள் உண்டு. ஆனால் நான் பயிற்சி செய்யும் போதே ஆட்டம் இழக்காமல் அடித்து விளையாடுவதை தான் என்னுடைய எண்ணமாக மனதில் வைத்து பயிற்சி செய்வேன். இதனால் நான் அடித்து விளையாடினாலும் ஆட்டம் இழப்பது குறைவாக இருக்கும்” என்று கூறி இருக்கிறார்.






