3வது இடத்தில் சிவம் தூபேவை அனுப்பி.. கம்பீர் எதிரணிகளுக்கு ஸ்ட்ராங்கா இதை சொல்ல விரும்புகிறார் – தினேஷ் கார்த்திக்

0
419

நேற்று நடைபெற்ற வங்கதேசம் மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான ஆசிய கோப்பை சூப்பர் போர் போட்டியில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இது சூழ்நிலையில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் சில முக்கிய கருத்துக்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

நேற்று நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 168 ரன்கள் குவித்தது. 6.2 ஓவர்களில் 77 ரன்கள் குவித்து அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திய இந்திய அணி மூன்றாவது வரிசையில் களமிறங்கிய சிவம் தூபே 2 ரன்னில் வெளியேறியதால் மாற்றி அமைக்கப்பட்ட பேட்டிங் வரிசை கை கொடுக்கவில்லை.

இதனால் 200 ரன்ன்களுக்கு மேல் செல்ல வேண்டிய நிலையில் இந்திய அணி 168 ரன்கள் மட்டுமே எடுத்தது. இது தற்போது விமர்சனத்தை உண்டாக்கி இருக்கும் நிலையில் இது குறித்த தினேஷ் கார்த்திக், இந்திய அணிக்கு ஆதரவாக தனது கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். இந்திய அணிக்கு எத்தனை விக்கெட் இழந்தாலும் நெகிழ்வு தன்மையான பேட்டிங் வரிசை இருக்கிறது என்றும் சுட்டிக்காட்டி பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “ரிசாத் உசேன் பந்த வீசும் போது அவரை வீழ்த்துவதற்காக சிவம் துபே வந்தார். ஆனால் துரதிஷ்டவசமாக அது நடக்கவில்லை. பின்னர் நசூம் அகமது ஓவர்கள் மீதும் இருந்ததால் அவரை சமாளிக்க திலக் வர்மா மற்றும் அக்சார் பட்டேலை அனுப்பினார்கள். உண்மை என்னவென்றால் இந்திய வீரர்களுக்கு என்ன கொடுக்கப்பட்டாலும் அதை சிறப்பாக செய்வதில் உறுதியாக இருக்கிறார்கள். இந்த வகையான போட்டிகளில் நீங்கள் அனுபவம் மற்றும் நெகிழ்வு தன்மையை பயன்படுத்த விரும்புகிறீர்கள்.

இதையும் படிங்க:17 வருட ஜெயசூர்யா ஆசிய கப் சாதனை.. தூள் தூளாக்கிய அபிஷேக் ஷர்மா.. மாஸ் அதிரடி பேட்டிங்

ஆனால் இது உலகக் கோப்பையில் அமையும் என்று சொல்ல முடியாது. ஒரு அணியில் அதிக ஆல்ரவுண்டர்கள் இருக்கும்போது அதன் நன்மை எப்படி இருக்கும். இதனை பரிசோதனை முயற்சி என்று சொல்ல முடியாது. ஆனால் நெகிழ்வு தன்மை என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம். ஆட்டத்தின் சில புள்ளிகளில் அவர்கள் யாரை பந்து வீச அனுமதிக்கிறார்கள், என்பதைப் பொறுத்து உங்கள் திட்டங்களை எதிர்கொள்ள இது எங்களிடம் இருக்கிறது என்று கூறி எதிரணிக்கு காட்டுகிறார்கள். இதன் மூலம் இந்திய வீரர்கள் ஒரு போட்டியை கொண்டு வர விரும்புகிறார்கள்” என்று அவர் பேசியிருக்கிறார்

- Advertisement -