நேற்று டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் வீரர் அபிஷேக் சர்மா 68 பந்தில் ஆட்டம் இழக்காமல் 135 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். மேலும் இந்த போட்டியில் தான் சதம் அடித்தது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
நேற்றைய போட்டியில் தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கிய அவர் கடைசி வரையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார். அதிரடி ஆட்டக்காரரான அவருடைய பேட்டிங் நேற்று மிகவும் புத்திசாலித்தனமாகவும் அமைந்தது. அதிக ரன் எடுத்தவர்களுக்கான ஆரஞ்சு தொப்பியையும் வென்றார்.
ஆடுகளம் இப்படி இருந்தது
இது குறித்து பேசி உள்ள அபிஷேக் சர்மா கூறும்போது ” நேற்று ஆரம்பம் முதலே எங்களுடைய திட்டம் மிகவும் தெளிவாக இருந்தது. ஆனால் நாங்கள் உள்ளே சென்று பார்க்கும் போது ஆடுகளத்தில் கொஞ்சம் பந்து நின்று வந்தது. ஆனால் பவர் பிளேவை முழுதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதுதான் நானும் ஹெட்டும் முடிவு செய்திருந்தோம். எனவே அதன்படியே நாங்கள் விளையாடினோம்”
“நான் இளம் வீரராக கடந்த மூன்று சீசனுக்கு முன்பு களம் இறங்கிய போது என்னுடைய திறமையை ரசிகர்கள் எல்லோருக்கும் காட்ட வேண்டும் என்று நினைத்தேன். இப்போது அதை மாற்றிக் கொண்டு விளையாடுகிறேன். இந்த மைதானத்தில் சதம் அடிப்பது மிகவும் சிறப்பானது. நான் ரசிகர்களுக்காக விளையாடுகிறேன்”
அதிரடிக்கு காரணம் இதுதான்
“பொதுவாக பஞ்சாப் மாநில அணியில் எல்லா வீரர்களுமே சுதந்திரமாக விளையாட விரும்புவார்கள். நானும் பஞ்சாபிதான். எனக்கும் அந்த மனநிலைதான் இருக்கிறது. 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன் எங்கள் அணியில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தியது. ஏனென்றால் அப்போதைய பயிற்சியாளர் குழு முழு சுதந்திரத்தை எங்களுக்கு கொடுத்தது. மேலும் அவர்கள் இளம் வீரர்களை வளர்க்க நினைத்தார்கள்”
இதையும் படிங்க: 3 அல்லது 4 பந்து தோனி ஆடுறப்போ பாக்க சிரிப்பா இருந்துச்சு.. கிரிக்கெட்டே கேலிக்கூத்தா மாறிடுச்சு – இந்திய முன்னாள் வீரர் அதிரடி
“என்னுடைய அப்பா நான் சிறுவயதில் கிரிக்கெட் விளையாடுவதை கூட மிகவும் நெருக்கமாக பார்ப்பார். இப்போது கூட மைதானத்தில் அமர்ந்து கொண்டு நான் அடுத்த பந்தை எப்படி விளையாட வேண்டும் என சொல்லிக் கொண்டிருப்பார். கேமரா அவரை நோக்கி காட்டினால் அதை நீங்கள் பார்க்க முடியும். அவருடைய ஆலோசனைகள் எனக்கு உதவுகிறது” என்று கூறி இருக்கிறார்.






