3 அல்லது 4 பந்து தோனி ஆடுறப்போ பாக்க சிரிப்பா இருந்துச்சு.. கிரிக்கெட்டே கேலிக்கூத்தா மாறிடுச்சு – இந்திய முன்னாள் வீரர் அதிரடி

0
168

19வது ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடி நான்கு போட்டிகள் தோல்வியடைந்து இரண்டு போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

இந்த சூழ்நிலையில் நாளை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முக்கியமான போட்டியில் களமிறங்கும் சிஎஸ்கே குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்களை பதிவு செய்து இருக்கிறார்.

- Advertisement -

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரில் மோசமான முறையில் விளையாடி வருகிறது. இதுவரை விளையாடிய 6 போட்டிகளில் நான்கு போட்டிகள் தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் மிகவும் பின்தங்கி இருக்கும் நிலையில் நாளை நடைபெற உள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

இந்த சூழ்நிலையில் எம் எஸ் தோனி நாளை போட்டியில் விளையாடுவார் என்கிற தகவல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பெரிய உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில் நாளைய போட்டியில் தோனி களம் இறங்கி நான்கு அல்லது ஆறு பந்துகளுக்கு மட்டுமே விளையாடும் நிலையில் அது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்று இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேகர் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் போது “தற்போது சிஎஸ்கே அணி தோனி இல்லாமல் விளையாடி வரும் நிலையில் நாளைய போட்டியில் தோனி களம் இறங்கினால் அவரை எப்படி விளையாட வைப்பீர்கள். நாளுக்கு நாள் அவர் சிறப்பாக செயல்படுவது கடினமாகிக் கொண்டே வருகிறது. அதனால் அவர் பேட்டிங் வரிசையில் சற்று கீழே இறங்கி நான்கு அல்லது ஐந்து பந்துகள் களம் இறங்கி விளையாடும் போதெல்லாம் அது சற்று கேலிக்கூத்தாகவே இருந்தது. ஊடகங்களும் அதை பெரிதுபடுத்தி காட்டி எப்பேர்பட்ட ஆட்டம் என்று புகழ்ந்தன.

ஆனால் உண்மையில் அந்த ஆட்டம் நீடித்தது வெறும் நான்கு பந்துகள் மட்டுமே. எனவே அந்த நிலை இனி சாத்தியம் இல்லை மேலும் அது நீண்ட காலம் இதுபோன்ற வடிவமைப்பில் அமையப் போவதும் இல்லை. மேலும் டோனி களத்தில் இருந்து கேப்டன் பொறுப்பில் இல்லாத போது ருத்ராஜ் அதை எப்படி அனுபவித்து இருப்பார் எனவும் தோனி களத்தில் இல்லாதபோதும் கேப்டனாக அவர் எப்படி அனுபவித்து இருப்பார் எனவும் என்னால் யூகிக்க முடியாது” என்று பேசி இருக்கிறார்

- Advertisement -