நான் 2 பேர குறிப்பிட்டு சொல்லணும்.. என் அதிரடிக்கு அவங்க தந்த ஆதரவுதான் காரணம் – அபிஷேக் ஷர்மா பேட்டி

0
491

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி அதிரடியாக விளையாடி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த அபிஷேக் சர்மா தான் விளையாடிய விதம் குறித்து சில முக்கிய கருத்துக்களை பகிர்ந்திருக்கிறார்.

- Advertisement -

இங்கிலாந்து அணியின் வெற்றியை பறித்த அபிஷேக் ஷர்மா

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே குவித்தது. இதில் இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் ஆறுதல் அளிக்கும் விதமாக 44 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். வேறு யாரும் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் வழங்கவில்லை.

இதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மாவின் அதிரடியான ஆட்டத்தால் இந்திய அணி 12.5 ஓவர்களிலேயே மூன்று விக்கெட் இழப்புக்கு 133 ரன்கள் குவித்து சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிறகு பேசிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் மற்றும் கோச் கம்பீர் ஆகியோர் தனக்கு முழு ஆதரவு அளித்ததாகவும், இயல்பான ஆட்டத்தை விளையாட அனுமதித்ததாகவும் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இரண்டு பேரை குறிப்பிட விரும்புகிறேன்

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது ” இந்தப் போட்டியின் மூலமாக நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். அணியின் கோச் மற்றும் பயிற்சியாளரை சிறப்பாக குறிப்பிட விரும்புகிறேன். அவர்கள் இளைஞர்களுக்கு நிறைய சுதந்திரம் கொடுக்கிறார்கள். அது அணியில் மிகப்பெரிய விஷயமாகும். ஆடுகளத்தை பொருத்தவரை இரண்டு முகமாக அது இருந்தது. எங்கள் அணியின் பந்துவீச்சு மிகவும் சிறப்பாக இருந்தது. ஒரு கட்டத்தில் நாங்கள் 160 முதல் 170 ரன்கள் எட்ட வேண்டியிருக்கும் என்று நினைத்தேன்.

இதையும் படிங்க:232.35 ஸ்ட்ரைக் ரேட்.. 34 பந்து.. அபிஷேக் ஷர்மா அதிரடி பேட்டிங்.. இந்திய அணி சாதனை வெற்றி.. இங்கிலாந்து முதல் டி20

ஆனால் உண்மையில் எங்கள் பந்துவீச்சு சிறப்பாக இருந்தது. நாங்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறோம். நான் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது மறுமுனையில் சஞ்சு விளையாடிய விதத்தை ரசித்தேன். இதில் சிறப்பாக விளையாட எனக்கு ஐபிஎல் மிகவும் உதவியாக இருந்தது. கேப்டன் மற்றும் பயிற்சியாளர் கொடுக்கும் சுதந்திரம் மிகவும் முக்கியமானது. மேலும் இங்கிலாந்து அணியின் பந்து வீச்சுக்கு ஏற்ப நான் தயாராக இருந்தேன். குறிப்பாக ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஏற்ப விளையாட தயாராக இருந்தேன்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -