இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா 47 பந்தில் அதிரடி சதம் அடித்து 20 ஓவர் முழுமையாக களத்தில் நின்றார். மேலும் இந்த போட்டிகள் தான் சதம் வடித்தது குறித்து பேசி இருக்கிறார்.
மேலும் இந்த போட்டியில் அவர் சதம் அடித்த பிறகு கைகட்டி நின்று சிரித்தார். அதற்குப் பிறகு அவரது வழக்கமான வெற்றி கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். அவரது பேச்சில் இதற்கான காரணம் குறித்தும் பேசியிருக்கிறார்.
வியூகத்தை உடைத்த அபிஷேக் சர்மா
சிஎஸ்கே அணிக்கு எதிரான கடைசி போட்டி போலவே இந்த போட்டியிலும் அபிஷேக் சர்மாவை குறி வைத்து பவர் பிளேவில் பார்ட் டைம் ஆப் ஸ்பின்னர் நிதிஷ் ராணாவை இறக்கி விட்டார்கள். டி20 உலக கோப்பையில் பவர் பிளேவில் அபிஷேக் ஷர்மா ஆப் ஸ்பின்னர்களுக்கு பெரிய அளவில் தடுமாறி விக்கெட்டைக் கொடுத்தது இருந்தார்.
இந்த முறை அபிஷேக் ஷர்மா சிஎஸ்கே வின் மேத்யூ சார்ட் மற்றும் தற்போது டெல்லி அணியின் நிதிஷ் ராணா இருவரது ஓவரையும் அடி பிரித்து விட்டார். இந்த போட்டியில் அவர் மொத்தம் இறுதிவரை நின்று 68 பந்து 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்கள் உடன் 135 ரன்கள் எடுத்தார். இதில் 100 ரன்கள் சிக்ஸர்கள் மூலம் வந்தது.
இதனால்தான் சிரித்தேன்
இதுகுறித்து அபிஷேக் ஷர்மா பேசும் போது ” நான் முதல்முறையாக 20 ஓவர்கள் நின்று முழுமையாக விளையாடியிருக்கிறேன் என்று நினைக்கிறேன். எங்களுடைய பயிற்சியாளர் குழுவில் இருக்கும் ஜேம்ஸ் பிராங்கிளின் மற்றும் முத்தையா முரளிதரன் இருவரும் என்னிடம் 20 ஓவர் விளையாட வேண்டும் என்று சொல்வார்கள். மேலும் சதம் அடிக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதனால் நான் அப்படியான கொண்டாட்டத்தை செய்தேன்”
இதையும் படிங்க: அபிஷேக் ஷர்மா ருத்ர தாண்டவ சதம்.. விராட் மெகா சாதனை தூள் தூள்.. ஆரஞ்சு தொப்பியை கைப்பற்றி அசத்தல்
“மேலும் நான் இறுதி கெட்ட ஓவர்களில் விளையாட இன்னும் சரியான முறையில் தயாராகவில்லை. கிளாசன் என்னிடம் ஷேப்பை விடாமல் வைத்திருக்க சொன்னார். நான் அவருக்கு சிங்கிள் எடுத்துக் கொடுத்த முடிவு செய்தேன். அவர் இறுதிக் கட்ட ஓவர்களில் என்ன செய்வார் என்று நமக்குத் தெரியும்” என்று கூறியிருக்கிறார்.






