இன்று ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் வீரர் அபிஷேக் ஷர்மா அதிரடி சதம் அடித்து விராட் கோலியின் மெகா சாதனையை முறியடித்தார்.
இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர் அகிப் நபி நீக்கப்பட்டு அவருடைய இடத்திற்கு நிதிஷ் ரானா கொண்டுவரப்பட்டார்.
தொடக்க ஜோடி அதிரடி
இதைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த ஹைதராபாத் அணிக்கு முதல் விக்கட்டுக்கு 8.5 ஓவரில் 97 ரன்கள் பார்ட்னர்ஷிப் வந்தது. தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ் ஹெட் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 37 ரன்கள் எடுத்தார்.
இன்னொரு முனையில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 47 பந்துகளில் சதம் அடித்தார். இதைத்தொடர்ந்து இவருக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்த கேப்டன் இஷான் கிஷான் துரதிஷ்டவசமாக 13 பந்துகளில் 25 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார்.
விராட் கோலி சாதனை உடைந்தது
இதை தொடர்ந்து சிறப்பாக விளையாடிய அபிஷேக் ஷர்மா இறுதிவரை களத்தில் நின்று 68 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களுடன் 135 ரன்கள் எடுத்தார். ஹென்றி கிளாசன் 13 பந்துகளில் 3 பவுண்டரி 3 சிக்ஸர் உடன் 37 ரன்கள் எடுத்தார். ஹைதராபாத் 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 242 ரன்கள் எடுத்தது.
இன்று அபிஷேக் ஷர்மா அடித்த சதம் அவருக்கு டி20 கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக ஒன்பதாவது சதமாக பதிவாகியது. மேலும் டி20 கிரிக்கெட்டில் அதிக சதம் அடித்த வீரராக அபிஷேக் ஷர்மா சாதனை படைத்தார். விராட் கோலியும் இவரும் 9 டி20 சதங்கள் அடித்திருக்கிறார்கள். ஆனால் குறைந்த இன்னிங்ஸ்களில் அபிஷேக் ஷர்மா அடித்ததால் முதல் இடத்தை பிடித்தார்.
இதையும் படிங்க : ஐபிஎல் பிளே ஆப் செல்லும் அணியின் வீரர்களுக்கு.. இந்திய அணியில் இடமில்லை.. பிசிசிஐ முடிவு – காரணம் என்ன?
அதிக டி20 சதங்கள் (இந்தியர்கள்)
9 – அபிஷேக் ஷர்மா
9 – விராட் கோலி
8- ரோஹித் சர்மா
7 – சஞ்சு சாம்சன்
7 – கே.எல். ராகுல்
7- இஷான் கிஷன்
6- ருதுராஜ் கெய்க்வாட்
6- ஷுப்மன் கில்
6 – சூர்யகுமார் யாதவ்






