இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் அபிஷேக் சர்மா 35 பந்துகளில் 84 ரன்கள் குவித்தார். இவர் அதிரடி பேட்டிங் காரணமாக இந்திய அணி 48 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஆட்டநாயகன் விருது பெற்ற அபிஷேக் சர்மா தன்னுடைய பேட்டிங் குறித்து பேசி இருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் சர்மா இரண்டு விக்கெட்டுகள் விழுந்திருந்த போதும் அதைப்பற்றி கவலைப்படாமல் அதிரடியான துவக்கத்தை கொடுத்தார். வழக்கம்போல் சிக்ஸர்கள் அடிப்பதில் பெரிய ஆர்வம் காட்டி 8 சிக்ஸர்கள் அடித்து நொறுக்கினார்.
நான் புரிந்து கொண்டேன்
எந்த ஒரு சூழ்நிலையிலும் அவர் பொறுமையாக விளையாடுவதற்கு முயற்சி செய்யவில்லை. மாறாக டிக்கெட்டுகள் விழவிழ அவர் அதிரடியும் அதிகமாக்கிக் கொண்டே சென்றது. இன்றைய போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 35 பந்தில் 84 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
தன்னுடைய பேட்டிங் குறித்து பேசி உள்ள அபிஷேக் சர்மா கூறும் பொழுது “எங்களுக்கு முதல் நாளில் இருந்து ஒரு திட்டம் இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து அதையே செயல்படுத்தி வருகிறோம். எனவே எல்லா பந்தையும் அடிக்க வேண்டும்; 200 ஸ்டிரைக் ரேட் இருக்க வேண்டும். அதற்கு நம்மிடம் தெளிவான இன்டெண்ட் இருக்க வேண்டும் என்பது குறித்து நான் சீக்கிரத்தில் புரிந்து கொண்டேன்”
என் பேட்டிங் பற்றி தெரியும்
“எல்லா அணிகளுமே என்னுடைய பேட்டிங்கை பார்த்து திட்டங்களை வைத்திருக்கிறார்கள். அதனால் நான் எப்படி தயாராகிறேன் என்பது தான் விஷயம். நான் எனது உள்ளுணர்வை நம்பி விளையாடுகிறேன். நான் அதிக ரிஸ்க் இருக்கும் முறையில் விளையாடுகிறேன் என்று சொல்ல மாட்டேன். அதேபோல இப்படி விளையாடுவது எனக்கு வசதியானதும் கிடையாது”
இதையும் படிங்க: கம்பீர் பாய் என்கிட்ட சொன்ன விஷயம் இதுதான்.. நான் அர்ஷ்தீப் கிட்ட கேட்டது வேற – ரிங்கு சிங் பிளான் குறித்து பேச்சு
“நான் பெரிய ஷாட் அடிப்பதற்காக ரேஞ்ச் ஹிட்டிங் பயிற்சி செய்வது கிடையாது. நான் வலைப்பயிற்சியிலும் பந்தை டைமிங் செய்து விளையாடவே பயிற்சி செய்கிறேன். பந்தை கவனமாக பார்த்து சூழ்நிலைக்கு தகுந்தபடி விளையாடுவது முக்கியம். என்னுடைய பயிற்சியும் இதன் அடிப்படையில்தான் இருக்கும். நீங்களே உங்களுடைய பேட்டிங் வீடியோவை பார்த்தால், பவுலர்கள் உங்களுக்கு எப்படி பந்து வீசுகிறார்கள் என்பதை வைத்து பல விஷயங்களை புரிந்து கொள்ளலாம்” என்று கூறி இருக்கிறார்.






