கம்பீர் பாய் என்கிட்ட சொன்ன விஷயம் இதுதான்.. நான் அர்ஷ்தீப் கிட்ட கேட்டது வேற – ரிங்கு சிங் பிளான் குறித்து பேச்சு

0
77
Rinku

இன்று நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு அபிஷேக் சர்மா தந்த துவக்கமும் ரிங்கு சிங் தந்த பினிஷிங்கும் மிக முக்கிய காரணமாக அமைந்தன. இந்த போட்டியில் தன்னுடைய திட்டம் என்ன என்பது குறித்து ரிங்கு சிங் பேட்டி அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 7 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் குவித்தது. ஒரு கட்டத்தில் இந்திய அணி தன்னுடைய முக்கிய ஏழு விக்கெட்டுகளை கடைசி நேரத்தில் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணிக்கு அழுத்தத்தை தரக்கூடிய பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியாத நிலைமை காணப்பட்டது.

- Advertisement -

ரிங்கு சிங் அசத்தல்

இந்த நிலையில் ஒரு முனையில் நிலைத்து நின்ற ரிங்கு சிங் ஆட்டத்தை சரியாக கனித்து இறுதி கட்ட பேட்ஸ்மேன் அர்ஸ்தீப் சிங்கை கையில் வைத்துக்கொண்டு அபாரமாக விளையாடினார். 19ஆவது ஓவரில் அர்ஸ்தீப் சிங்கிள் எடுக்க முடியாமல் தடுமாறினார். அப்போதும் கூட பொறுமையாக இருந்து அற்புதமாக ஆட்டத்தை முடித்தார்.

இவரது சிறப்பான பேட்டிங் ஃபினிஷிங் காரணமாக இந்திய அணி 210 ரன்னில் இருந்து 238 ரன்கள் என்கின்ற இடத்திற்கு சென்றது. இறுதிவரை களத்தில் நின்ற ரிங்கு சிங் 20 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ஒருவேளை இவர் அவசரப்பட்டு விளையாடி ஆட்டம் இழந்து இருந்தால் இந்த போட்டியில் இந்திய அணி தோற்கவும் வாய்ப்பு இருக்கிறது.

- Advertisement -

என்னுடைய பிளான் இதுதான்

இந்த போட்டி குறித்து பேசிய ரிங்கு சிங் கூறும் பொழுது ” நான் இந்திய அணிக்கு உள்ளே வெளியே என சென்று வந்து கொண்டிருந்தேன். இதன் காரணமாக என் மீது ஒரு அழுத்தம் இருந்தது. எனவே நான் முதலில் பொறுமையாக விளையாடி பிறகு தாக்கி விளையாட முடிவு செய்தேன். ஆனால் என்னிடம் கம்பீர் பாய் அட்டாக் இன்டெண்ட் வைத்து விளையாடுமாறு கூறினார்”

இதையும் படிங்க : 238 ரன்.. உலக கோப்பைக்கு ஸ்பெஷல் பிளான்.. இந்திய அணியின் முதல் வெற்றி.. நியூசிலாந்து பரிதாப தோல்வி

“மேலும் அர்ஸ்தீப் பந்தை அடிக்க முடியாமல் தடுமாறிய போது நான் எதுவும் பெரிதாக சொல்லவில்லை. சிங்கிள் எடுத்துக் கொடு நான் பார்த்துக் கொள்கிறேன் என்றுதான் சொன்னேன். மேலும் நான் ஒரு கேட்ச் வாய்ப்பை தவறவிட்டேன். அதற்குக் காரணம் லைட் கிடையாது. நானாகத்தான் தவற விட்டு விட்டேன். ஆனால் அது ஒரு பிரச்சனை கிடையாது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -