இந்திய அணி உலகின் நம்பர் 1 அணியாக இருந்தாலும் அவர்கள் நடந்து கொள்வது மூன்றாம் தரமாக இருப்பதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கடுமையான விமர்சனம் செய்திருக்கிறார்.
இந்திய அணி பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மற்றும் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் மொஹ்சின் நக்வி கைகளில் இருந்து ஆசிய கோப்பை மற்றும் மெடல்களை பெறாமல் புறக்கணித்தது. ஆனால் கோப்பை மற்றும் மெடல்களை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்டு வருகிறது.
பாகிஸ்தான் பிடிவாதம்
அதே சமயத்தில் ஆசிய கிரிக்கெட் அதே சமயத்தில் மொஹ்சின் நக்வி ஆசிய கிரிக்கெட் கவுன்சில் அலுவலகத்திற்கு வந்து பிசிசிஐ நிர்வாகிகள் தாராளமாக கோப்பை மற்றும் மெடல்களை தன்னிடம் பெற்றுக் கொள்ளலாம் என்று கூறியிருக்கிறார்.
அவர் கைகளால் மெடல் மற்றும் கோப்பையை வாங்க கூடாது என இந்திய கிரிக்கெட் வாரியம் பிடிவாதமாக இருக்கிறது. இதன் காரணமாக இரண்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே கடுமையான உரசல்கள் சென்று கொண்டிருக்கிறது. இதனால் இன்னும் இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் ஆசியக் கோப்பை மற்றும் மெடல்கள் ஒப்படைக்கப்படவில்லை.
மூன்றாம் தரமாக நடக்கிறார்கள்
இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறும் பொழுது “இந்திய அணி முதல் இடத்தில் இருக்கிறது. ஆனால் அவர்களுடைய நடவடிக்கைகள் மூன்றாம் தரமாக இருக்கிறது. எங்களுடைய மொஹ்சின் நக்வி கோப்பையை அவர்களுக்கு வழங்குவார். அவர்கள் அதை வாங்க மறுத்தால், அவர்கள் உலகின் முன்னால் அவமானப்படுவார்கள். எனவே நாம் கோப்பையை ஒப்படைக்க கூடாது”
இதையும் படிங்க: 47 ஆண்டு சாதனை.. கேப்டனாக மாஸ் காட்டும் சுப்மன் கில்.. இங்கிலாந்தை தொடர்ந்து இந்தியாவிலும் ரெக்கார்ட்
“நீங்கள் முதலிடத்தில் இருக்கும் அணியாக இருக்கிறீர்கள். சிறப்பாக விளையாடி கோப்பையையும் வென்றீர்கள். பிறகு அதை வாங்கிக் கொள்வதில் ஏன் பிடிவாதம் செய்கிறீர்கள்? ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவர் கோப்பையை கொடுப்பதுதான் வழக்கமான வழிமுறை. இதுவே உலகக் கோப்பையை பாகிஸ்தான் வென்று ஐசிசி தலைவர் ஜெய் சா இடமிருந்து கோப்பையை வாங்க முடியாது என்று சொன்னால் நியாயமாக இருக்குமா?” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.






