நேற்று இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா யுவராஜ் சிங்கின் 17 வருட சாதனை ஒன்றை முறியடித்து அசத்தியிருக்கிறார்.
தற்போது ஜோஸ் பட்லர் தலைமையில் இந்தியா வந்திருக்கும் இங்கிலாந்து அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் முதலில் விளையாடுகிறது. இதனைத் தொடர்ந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் அடுத்து விளையாட இருக்கிறது.
ஒரே அணியாக அசத்தல் செயல்பாடு
நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா அணியின் பந்துவீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவரும் மிகச் சிறப்பாக பந்துவீச்சில் செயல்பட்டு, இங்கிலாந்து அணியை வெறும் 132 ரன்னுக்கு சுருட்டினார்கள்.
இதைத் தொடர்ந்து விளையாடிய இந்திய அணிக்கு இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 34 பந்துகளில் 8 சிக்ஸர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் உடன் 79 ரன்கள் குறித்து, இந்திய அணி 12.5 ஓவரில் எளிதாக வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் இருந்தார். வழக்கமாக அவர் வெளிப்படுத்தும் அதிரடியான பேட்டிங் முறை இந்த போட்டியிலும் தொடர்ந்தது.
குரு சாதனையை உடைத்த சிஷ்யன்
இந்த போட்டியில் அபிஷேக் ஷர்மா மொத்தம் எட்டு சிக்ஸர்கள் இங்கிலாந்து அணிக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் அடித்திருந்தார். இதன் மூலம் ஒரு சர்வதேச டி20 போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்கின்ற புதிய சாதனையையும் இளம் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா படைத்தார்.
இதையும் படிங்க : 10 ஆண்டு கழித்து ரோகித்துக்கு சோகம்.. ஜெய்ஸ்வால் கில் ஏமாற்றம்.. 17 பையனுக்கு செய்தது தவறு.. ரசிகர்கள் விமர்சனம்
இதற்கு முன்பாக 2007 ஆம் ஆண்டு முதல் டி20 உலக கோப்பை தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக 16 பந்தில் 58 ரன்கள் எடுத்திருந்த யுவராஜ் சிங் மொத்தம் ஏழு சிக்ஸர்கள் அடித்திருந்தால். இதுவே ஒரு இந்திய வீரர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு போட்டியில் அதிக சிக்ஸர் அடித்த சாதனையாக இருந்தது. தற்போது தனது மெண்டர் யுவராஜ் சிங் சாதனையை அபிஷேக் ஷர்மா உடைத்து அவரை பெருமை படுத்தி இருக்கிறார்!






