டி20 உ.கோ.. இந்த தமிழக வீரரை தேர்வு செய்யாத காரணம் இதுதான்.. உண்மையை உடைத்த அபிஷேக் நாயர்

0
298
Abhishek

நடப்பு டி20 உலக கோப்பை தொடருக்கு இந்திய அணி ஏப்ரல் மாதம் இறுதியில் அறிவிக்கப்பட்டது. இந்த அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்தது. தற்பொழுது இந்தத் தேர்வு குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் அபிஷேக் நாயர் முக்கியமான விஷயம் ஒன்றைக் கூறியிருக்கிறார்.

தற்போது தேர்வு செய்யப்பட்டிருக்கும் டி20 உலகக் கோப்பை அணியில் ஒரு தமிழக வீரர் கூட இடம்பெறவில்லை. இது ஆரம்ப முதலே மிகவும் விமர்சனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாக இருந்து வந்தது. இந்த புறக்கணிப்பை தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் வீரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

- Advertisement -

குறிப்பாக தமிழக வீரர் நடராஜனுக்கு வாய்ப்பு கிடைக்காதது எல்லோரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. அவர் மிகச் சிறப்பான முறையில் நடந்து முடிந்த ஐபிஎல் தொடர் முழுக்க செயல்பட்டிருந்தால். இது குறித்து வெளிப்படையாகவே தமிழக முன்னாள் வீரர் பத்ரிநாத் விமர்சனம் செய்திருந்தார்.

இதேபோல் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை வென்ற கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த தமிழக வீரர் வரும் சக்கரவர்த்தியும் 16 ஆட்டங்களில் 21 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் கைப்பற்றியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்தார். சுழல் பந்துவீச்சாளராக இவருக்கும் டி20 உலகக்கோப்பை இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

தற்போது வருண் சக்கரவர்த்திக்கு இடம் கிடைக்காதது குறித்து பேசி இருக்கும் அபிஷேக் நாயர் கூறும் பொழுது “வருண் சக்கரவர்த்தி ஒவ்வொரு ஆண்டும் விஜய் ஹசாரே டிராபி வரை சிறப்பாக செயல்பட்டு வருகிறார். ஆனால் அவரிடம் தேர்வாளர்கள் எப்பொழுதும் அவருடைய பேட்டிங் மற்றும் பீல்டிங் இரண்டையும் மேம்படுத்த வேண்டும் என்று கூறி வந்திருக்கிறார்கள். இதுதான் தேர்வு செய்யப்படுவதற்கான மன நிலையாக இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி விஜய் ஹசாரே தொடரில் ரன் எடுத்ததை அவர் எனக்கு அனுப்பி வைத்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : கேரி கிரிஸ்டன் பாவம் சிக்கிட்டாரு.. இந்தியா மாதிரி பாகிஸ்தான் டீம் கிடையாது – இர்பான் பதான் பேச்சு

எனவே வீரர்களும் தானாகவே மூன்று துறைகளிலும் சிறப்பாக இருந்தால்தான் இந்திய அணியில் தேர்வாக முடியும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு இதுவெல்லாம் தேவை என்று தெரிகிறது. தற்பொழுது வரும் சக்கரவர்த்தி தன்னுடைய பீல்டிங்கையும் சிறப்பாக மாற்றி இருக்கிறார். வீரர்கள் மூன்று விஷயங்களும் தங்களிடம் இருக்க வேண்டும் என்று நினைக்கிற பொழுது, நீங்கள் ஒரு துறையில் மட்டும் விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பது சிரமம்” என்று கூறியிருக்கிறார்.