இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா திடீரென உடல் எடையை குறைத்து ஆச்சரியப்படும் விதமாக திரும்பியது ஏன் என்பது குறித்து அபிஷேக் நாயர் தெரிவித்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்பாக ரோஹித் சர்மா உடல் எடையை குறைத்து மிகவும் பிட்டாக காணப்பட்டார். இதற்கு பின்னணியில் இருந்த காரணம் குறித்து அபிஷேக் நாயர் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.
ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாத போது கூட அவருடைய உடல் எடை குறித்து நிறைய விமர்சனங்கள் வந்தபடியே இருந்தது. ஆனாலும் பேட்டிங் மற்றும் உள்வட்ட பீல்டிங்கில் மிகவும் வேகமானவராகவே இருந்தார். தொடர்ந்து சிறப்பான முறையில் ரன்கள் எடுத்தும் வந்தார்.
அதே சமயத்தில் 2027 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றால் தொடர்ந்து உடல் எடை அதிகமாக இருந்தால் முடியாது என்று உணர்ந்திருக்கிறார். மேலும் அவர் உடல் எடை குறித்து டிரோல்கள் அதிகமானதும் அவர் வித்தியாசமான முடிவை எடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அபிஷேக் நாயர் கூறும் பொழுது “ஒரு எங்களுக்கு ஆஸ்திரேலியா தொடருக்கு முன்பாக 12 வாரங்கள் இருந்தது. நாங்கள் இந்த தொடருக்கு வித்தியாசமாக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தோம். எங்கள் கைகளில் நேரம் இருந்ததால் பழைய விஷயங்களை பராமரிக்கக்கூடாது மேல் நோக்கி வளர்ந்து போக வேண்டும் என்று விரும்பினோம். இதனால் ரோகித் சர்மா தான் வேகமாக இருப்பதற்கு பிட்டாக இருக்க வேண்டும் என்று நினைத்தார்”
இதையும் படிங்க: இந்தியா ODI சீரிஸ்.. விலகிய ஆஸி நட்சத்திர வீரர்.. அதிர்ஷ்ட வீரருக்கு இடம்.. காயத்தால் பாதிக்கப்படும் ஆஸ்திரேலியா
“எங்களுக்கு கிடைத்த 12 வாரம் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு தேவையான அளவுக்கு நேரத்தை கொடுத்தது. மேலும் ஒரு முறை விமான நிலையத்தில் ரோஹித் சர்மா புகைப்படங்கள் வெளியான போது, அவரது உடல் எடை குறித்து நிறைய கேலி கிண்டல்கள் வெளியில் சென்றன. இது அவரிடம் தாக்கத்தை உண்டாக்கி இருந்தது. எனவே இதற்கு பதில் அளிக்கும் விதமாக அவர் உடல் எடையை குறைத்தார்” என்று கூறியிருக்கிறார்.