தற்போது இளம் வீரர்களைக் கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் சிஎஸ்கே அணியை தேர்வு செய்தது தோனி கிடையாது என ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.
மேலும் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தனிப்பட்ட முறையில் சிஎஸ்கே அணிக்கு மிகப்பெரிய மோசமான தொடராக அமைந்தது. அவர்கள் புள்ளி பட்டியலில் முதல்முறையாக கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டார்கள். எனவே இந்த வருடம் அவர்கள் குறைந்தபட்சம் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.
இவர் விரும்பிய அணிதான் இது
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ருதுராஜ் நீங்கள் ரன்கள் எடுத்து அணியை முன்னே கொண்டு சென்றால் நீங்கள்தான் ராஜா. இப்போதைக்கு நீங்கள் இளவரசர் என்று நினைக்கலாம். இப்போதே நீங்கள்தான் ராஜா. உங்கள் அணியின் வெற்றியே நீங்கள் எவ்வளவு பெரிய தலைவராக இருக்கிறீர்கள் என்பதை காட்டும்”
“மேலும் இந்த அணிகள் ருதுராஜின் தாக்கம் இருப்பது போல எனக்கு தெரிகிறது. தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ள வீரர்கள் எல்லோருமே ருதுராஜின் விருப்பத்தின் பேரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது போல தெரிகிறது. அவர் இளம் வீரர்களைக் கொண்டு ஒரு எதிர்கால அணியை உருவாக்க விரும்புகிறார் என்று புரிந்து கொள்கிறேன். இது அவருடைய தனிப்பட்ட குணத்தை காட்டுகிறது”
இந்த இருவர் முக்கியம்
“சஞ்சு சாம்சனுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. அவர் பெயர் கேரளாவில் மிகவும் பரபரப்பானது. தற்பொழுது சென்னை அணி ரசிகர்களும் இதில் சேர்ந்திருக்கிறார்கள். அவர் தனது பார்மை தக்க வைத்து சிறப்பாக விளையாட வேண்டும். அப்படி செய்து விட்டால் அவருக்கு வேற லெவல் ரசிகர்கள் கூட்டம் சேரும்”
இதையும் படிங்க : நான் என்னோட மங்கூஸ் பேட்டை பரிசளிக்க விரும்பினால் அது நிச்சயம் இவருக்காக தான் இருக்கும்.. அவரிடம் அந்த திறமை இருக்கு – சிஎஸ்கே முன்னாள் வீரர்
“தற்போது சிஎஸ்கேவுக்கு வாங்கப்பட்டிருக்கும் கார்த்திக் சர்மா மற்றும் பிரசாந்த் வீர் இருவரும் அதிகபட்ச தொகைக்கு வாங்கப்பட்டு இருக்கிறார்கள். இந்த இரண்டு வீரர்களும் எப்படி செயல்படுகிறார்கள்? என்பது மிகவும் முக்கியமானது” என்று கூறியிருக்கிறார்.






