இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கும் ஐபிஎல் 19வது சீசனில் ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த சுமையையும் விராட் கோலியால் மட்டுமே சுமக்க முடியாது என ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.
கடந்த 18வது ஐபிஎல் சீசனில் முதல்முறையாக ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தற்போது நல்ல பலமான அணியாக உள்ளதால் இரண்டாவது முறை தொடர்ந்து கோப்பையை வெல்ல அந்த அணி முனைப்புடன் காணப்படுகிறது.
ஆர்சிபி பேட்டிங் வரிசையில் மேலே மட்டும் சிறந்த அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருப்பார்கள். போட்டியை வெற்றிகரமாக முடிப்பதற்கு கீழ் வரிசையில் அனுபவம் வாய்ந்த வீரர்கள் இருக்க மாட்டார்கள். இது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாக பல ஆண்டுகள் இருந்து வந்தது.
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இந்த இடத்தில் சர்வதேச அனுபவம் வாய்ந்த வீரர்கள் இடம் பெறுகிறார்கள். மேலும் சின்னசாமி மைதானத்திற்கு ஏற்ற வகையிலான பவுலர்களை இந்த முறை வாங்கி இருக்கிறார்கள். இதன் காரணமாகவே ஒரு அணியாக சேர்ந்து விளையாடி முதல் முறையாக கோப்பையை வென்றார்கள்.
இது குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும் பொழுது ” தற்போதுள்ள ஆர்சிபி அணியில் அனைத்து வீரர்களுக்குமே சிறப்பாக விளையாடுகிறார்கள். திருப்பி போட்டியை எடுத்துக் கொண்டால் விராட் கோலி 43 ரன்கள் மட்டுமே எடுத்தார். ஆனால் நல்ல ஸ்ட்ரைக் ரேட்டில் படிதார், செப்பர்டு, ஜிதேஷ் சர்மா ஆகியோர் ரன்கள் எடுத்தார்கள். க்ருனால் பாண்டியா தொடர் முழுவதும் சிறப்பாக பந்து வீசினார். இதனால் கோப்பையை வென்றார்கள். தன்னால் ஆர்சிபி அணியின் ஒட்டுமொத்த சுமையையும் சுமக்க முடியாது என விராட் கோலிக்கும் தெரியும்”
இதையும் படிங்க: ஆர்சிபி இந்த முறையும் கப் அடிக்கலாம்.. சிஎஸ்கே கிட்ட 2010ல இருந்த விஷயம் இப்ப அவங்க கிட்ட இருக்கு – சுரேஷ் ரெய்னா பேச்சு
“விராட் கோலி நிச்சயமாக அந்த அணியின் இதயம் போல் இருக்கிறார். அது அவருடைய விளையாட்டு திறமையினால் மட்டும் கிடையாது. அவர் களத்திற்கு உள்ளே மற்றும் வெளியே கொண்டு வரும் உற்சாகத்திலும் பெரிய பங்களிப்பு செய்கிறார். அவர் அணியின் வீரர்களுக்கு நம்பிக்கையை கொடுக்கிறார். தற்போதும் அவர் அந்த அணியில் முதுகெலும்புதான்” என்று கூறியிருக்கிறார்.