ஒருமுறை அதுமட்டும் நடக்கட்டும்.. எல்லோரையும் தாண்டி ஆர்சிபி புது வரலாற செட் பண்ணும் – ஏபி.டிவில்லியர்ஸ் பேச்சு

0
40
RCB

இந்தியாவில் நடந்து முடிந்த பெண்கள் டி20 கிரிக்கெட் லீக்கில் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 லீக் பயணத்தில் ஆர்சிபி அணியின் முதல் சாம்பியன் பட்டம் இதுதான். அவர்கள் ஐபிஎல் தொடரில் 16 ஆண்டுகளாக இருந்து வந்தாலும், மூன்று முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய போதிலும் கோப்பையை அவர்களால் கைப்பற்ற முடியவில்லை.

இந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு மெகா ஏலத்தில் அணுகு முறையில் சில மாற்றங்களை செய்து ஓரளவுக்கு நல்ல அணியை உருவாக்கி பிளே ஆஃப்க்கு சென்றார்கள். ஆனால் அடுத்த ஆண்டு அவர்களுக்கு சரியான இந்திய பேட்ஸ்மேன் இல்லாததால் முதல் சுற்றோடு வெளியே வந்தார்கள். ரஜத் பட்டிதார் காயம் காரணமாக விளையாடாதது அந்த அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

- Advertisement -

தற்பொழுது மும்பை இந்தியன்ஸ் அணியிடம் இருந்து டிரேடிங் முறையில் ஆஸ்திரேலியா வேகப்பந்து வீச்சு ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீனை வாங்கி பேட்டிங் யூனிட்டை ஆர்சிபி அணி வலிமைப்படுத்தி இருக்கிறது. சின்னசாமி மைதானத்தில் ரன்கள் அடிப்பது மட்டுமே வெற்றியைத் தரும் என்கின்ற என்று உணர்ந்து இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.

அதே சமயத்தில் அவர்களுக்கு ஓரளவு டீசண்டான ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் இருக்கிறது. ஆனால் அவர்களுடைய ஸ்பின் டிபார்ட்மெண்ட்தான் மிகவும் பலவீனமாக காணப்படுகிறது. அவர்களுடைய ஸ்பின்னர்கள்ஓரளவுக்கு போட்டிக்குள் வருவார்கள் என்றால், ஆர்சிபி அணி இந்த முறை ஏதாவது சில ஆச்சரியங்களை நிகழ்த்தலாம்.

புது வரலாறு உருவாகும்

மேலும் பெண்கள் ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை வென்று இருக்கின்ற காரணத்தினால், ஒருபுறம் அது ஆண்கள் ஆர்சிபி அணிக்கு அழுத்தமாக மாறினாலும் கூட, இன்னொரு பக்கத்தில் அந்த அணிக்கு இது நல்ல பாசிட்டிவான விஷயங்களையும் கொண்டு வருகிறது. அதாவது இதுவரையில் அந்த அணியைச் சுற்றி இருந்த துரதிஷ்டமான விஷயங்கள் மாறிவிட்டதாக நினைக்கிறார்கள்.

- Advertisement -

இதுகுறித்து ஆர்சிபி அணியின் லெஜன்ட் ஏபி டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “பெண்கள் அணியினர் கோப்பையை கைப்பற்றினார்கள் தற்பொழுது ஆண்கள் அணியினர் கோப்பையை கைப்பற்ற போகிறார்கள். இதுதான் விதி. நிச்சயம் எங்களுடைய ஆண்கள் அணியினர் கோப்பையை வெல்வார்கள் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டு என்பது எப்பொழுதும் வேடிக்கையானது. அதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எனவே நாம் அதில் பொறுமையாக இருப்பது முக்கியம். நினைத்த மாறியே எல்லாம் நடந்தால் அது சலிப்பானதாக மாறிவிடும். ஒருமுறை நாங்கள் கோப்பையை வென்று விட்டால், பலமுறை தொடர்ந்து வெல்வோம்.

இதையும் படிங்க : ஐபிஎல் மினி ஏலம்.. இனி அதிக சம்பளம் கிடையாது.. ஆஸி இங்கிலாந்து திட்டம் பலிக்காது – ஐபிஎல் சேர்மன் புதிய அறிவிப்பு

ஆர்சிபி-யை தவிர ஒன்பது சூப்பர் ஸ்டார் அணிகள் இருக்கின்றன.அவர்கள் எல்லோருமே கோப்பையை வென்றவர்கள் கிடையாது. நாங்கள் எங்களுடைய சிறந்ததை கொடுத்திருக்கிறோம். ஐபிஎல்கோப்பையை வெல்ல நாங்களும் நெருங்கி வந்தோம். ஆனால் மூன்று முறை இறுதிப் போட்டியில் தோற்றோம். எங்களுக்குஅங்கும் இங்குமாக கோப்பையை வெல்ல வாய்ப்புகள் வந்தன. நாங்கள் கோப்பையை வெல்லவில்லை என்று குற்றம் சாட்டினாலும் கூட, முன்னவர்கள் விட்டுச் சென்ற ஆர்சிபி பாரம்பரியத்தை தொடர்ந்து எடுத்துச் செல்வோம்” என்று கூறி இருக்கிறார்.