Uncategorized

ஜெய்ஸ்வால் எதிர்காலத்தை நினைச்சா பயமா இருக்கு.. பிராட்மேன் கூட கம்பேரிசன் வருது – ஏபி டிவில்லியர்ஸ் கவலை

இந்திய இளம் நட்சத்திரம் ஜெய்ஸ்வாலின் கிரிக்கெட் எதிர்காலத்தை நினைத்தால் தனக்கு கொஞ்சம் பயமாக இருப்பதாக ஏபி.டிவில்லியர்ஸ் கூறியிருக்கிறார்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஜெய்ஸ்வால் 175 ரன்கள் குவித்தார். மேலும் 23 வயதில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக முறை 150 ரன்கள் தாண்டி எடுத்தவர்கள் பட்டியலில் பிராட்மேனுக்கு அடுத்த இடத்தையும் பிடித்தார்.

கொஞ்சம் பயமாக இருக்கிறது

தற்போது இந்திய கிரிக்கெட்டில் மூன்று வடிவத்திலும் விளையாடுவதற்கு 100% மிகப் பொருத்தமானவராக ஜெய்ஸ்வால் இருக்கிறார். ஆனால் அவருக்கு தற்போது டெஸ்ட் அணியில் மட்டுமே இடம் கிடைக்கிறது. டி20 மற்றும் ஒருநாள் இந்திய அணியில் அவருக்கு இன்னும் உறுதியான இடம் கிடைக்கவில்லை.

ஜெயஸ்வால் குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் பேசும்பொழுது “ஜெய்ஸ்வால் பிராட்மேன் போன்ற பெரிய ஜாம்பவான் வீரர்களுடன் ஒப்பிடப்படுகிறார். அவரது வளர்ச்சி எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. அதே சமயத்தில் அவரது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து எனக்கு கொஞ்சம் பயமாகவும் இருக்கிறது. அவர் தொடர்ந்து உடல் தகுதியுடன் இருக்கவும், தொடர்ந்து கற்றுக்கொண்டு தனது விளையாட்டை சிறப்பாக மாற்ற முடிந்தால், அவருக்கு வானமே எல்லையாக இருக்கும். அவரால் மிகப் பெரிய சாதனைகளை முறியடிக்க முடியும்”

- Advertisement -

ஜெய்ஸ்வால் ஏன் சிறந்தவர்?

“அவரால் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னுடைய பேட்டிங் வேகத்தை மாற்றி அமைத்துக் கொள்ள முடியும். பெரிய வீரர்களின் தனிச்சிறப்பான விஷயம் இதுதான். அவருக்கு உலகின் அனைத்து ஷாட்டுகளும் தெரியும். ஆனால் அது குறித்து அவருக்கு எந்த திமிரும் கிடையாது. அவர் தொடர்ந்து பணிவாக இருந்து செய்ய வேண்டியதை செய்கிறார். இதனால்தான் அவர் பெரிய சதங்களை அடிக்கிறார்”

இதையும் படிங்க : சாய் சுதர்சனுக்கு இப்பவும் இடம் உறுதி கிடையாது.. காரணம் அவர் பெரிய தப்பு பண்ணிட்டார் – ஸ்ரீகாந்த் விமர்சனம்

“குல்தீப் யாதவ் இந்தியாவின் நம்பர் ஒன் ஸ்பின்னர் ஆக எப்பொழுதும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். மிகவும் தாக்குதல் குணம் கொண்ட பந்துவீச்சாளராக இருக்கிறார். அவரால் அணிக்கு விக்கெட்டுகளை கைப்பற்றி சிறந்த தாக்கத்தை கொடுக்க முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts