இந்திய டி20 அணியின் டாப் ஆர்டர் மற்றும் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஆகியோர் என்ன செய்ய வேண்டும்? என்பது குறித்து ஏபி.டிவில்லியர்ஸ் அறிவுரை கூறியிருக்கிறார்.
இந்திய டி20 அணிக்கு கொடுக்கப்படும் திட்டங்கள் தவறாக இருக்கின்ற காரணத்தினால் பேட்ஸ்மேன்கள் கடுமையான நெருக்கடியில் இருந்து வருகிறார்கள். இதன் காரணமாக திடீரென இந்திய டெஸ்ட் அணி போல இந்திய டி20 அணியும் பலவீனமாக காணப்படுகிறது.
டாப் ஆர்டர் இதைச் செய்ய வேண்டும்
இதுகுறித்து பேசி உள்ள ஏபி.டிவில்லியர்ஸ் கூறும்பொழுது “இந்திய டாப் ஆர்டரில் இருக்கும் முதல் மூன்று பேட்ஸ்மேன்கள் மீதும் மிகவும் ஆக்ரோஷமானவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு இருப்பதாக நினைக்கிறேன். மேலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட வழியில் வேகமாக விளையாடுவதற்கான நெருக்கடியும் இருக்கிறது. ஆனால் அவர்கள் முன்னேறி செல்வதற்கு அவர்கள் மெதுவாக தங்கள் டச்சை கண்டுபிடித்து விளையாட வேண்டும்”
“ஐபிஎல் தொடரில் உங்களுக்கு கிடைத்த பாராட்டுகளுக்காக நீங்கள் அதேபோல சர்வதேச கிரிக்கெட்டில் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடிக்க வேண்டும் என்கின்ற அவசியம் கிடையாது. நான் அபிஷேக் ஷர்மாவை பந்தை பார்த்து நிதானமாக விளையாடச் சொல்வேன். யாரும் ஒவ்வொரு பந்தையும் சிக்ஸருக்கு அடிப்பீர்கள் என்ன எதிர்பார்க்க மாட்டார்கள். நீங்கள் சில நேரங்களில் அவசரப்பட்டு அடிப்படைகளை மறந்து விடுவதால் ஆட்டம் இழக்க வேண்டி வருகிறது”
பேட்டிங் ஆர்டரில் மாற்றம் இப்படித்தான்…
“என்னைப் பொறுத்தவரையில் இந்திய பேட்டிங் ஆர்டரில் முதல் மூன்று இடங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது. மேலும் இந்த மூவரும் கொஞ்சம் நிதானமாக விளையாடும் போக்கை கடைபிடிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே மேல் வரிசையில் இருந்து ரன்கள் வரும்”
இதையும் படிங்க : கம்பீருக்கு தானா அதிர்ஷ்டம்.. புரிந்து கொள்ளாமல் செய்யும் சொதப்பல்.. டி20 WC ஜெயிக்க முடியுமா? – முழு அலசல்
“நீங்கள் பேட்டிங் வரிசையில் நான்கு முதல் ஆறு வரையில் வீரர்களை எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆட்டத்தின் சூழ்நிலைக்கு தகுந்தவாறு உங்களுக்கு அதற்கான இடம் இருக்கும். இப்படி செய்யும் பொழுது பெரும்பாலும் எந்த விதமான குழப்பங்களும் வராது” என்று கூறி இருக்கிறார்.






