தோனியோட ஸ்பெஷல் இதுதான்… போட்ட ஸ்கெட்ச் மிஸ்ஸே ஆகாம குஜராத்தை அடிச்சாங்க – ஏபி டி வில்லியர்ஸ் கருத்து!

0
7179

மிகப்பெரிய பைனல்களில், மிகப்பெரிய அணிக்கு எதிராக தோனி வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருப்பது இதுதான் என்று தனது சமீபத்திய பேட்டிகள் கூறியுள்ளார் ஏபி டி வில்லியர்ஸ்.

2023 ஐபிஎல் சீசனின் முதல் குவாலிபயர் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதற்கு முன்னர் இரு அணிகளும் மூன்று முறை மோதியுள்ளன. அனைத்திலும் குஜராத் அணியே வெற்றி பெற்றதால், இம்முறையும் குஜராத் அணி வெற்றி பெறும் என்று பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

- Advertisement -

போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 172 ரன்கள் அடித்தது. மேலும், குஜராத் அணிக்கு பந்துவீச்சில் மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தி வரிசையாக விக்கெட்டுகளை வீழ்த்திய சிஎஸ்கே அணி, கடைசியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி முதல் அணியாக பைனலுக்குள் நுழைந்தது.

முதல்முறையாக சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தியதற்கு முக்கிய காரணமாக தோனியின் கேப்டன் பொறுப்பை பலரும் கூறி வருகின்றனர். சிலர் சென்னை சேப்பாக்கம் மைதானம் காரணம் என்று கூறுகின்றனர். அந்த வகையில் சிஎஸ்கே அணி குஜராத்தை வீழ்த்தியதற்கு என்ன காரணம் என்று கருத்து தெரிவித்திருக்கிறார் ஏபி டி வில்லியர்ஸ். அவர் கூறியதாவது:

“பல நெருக்கமான காரணங்கள் இருப்பதாக உணர்கிறேன் சென்னை சேப்பாக்கம் மைதானம், தோனி மற்றும் பைனலில் சிஎஸ்கே அணியின் செயல்பாடுகள் என எதுவாக இருந்தாலும், சென்னையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்த வேண்டும் என்றால் மிகச்சிறப்பான கிரிக்கெட்டை வெளிப்படுத்த வேண்டும் என்கிற கருத்துக்கள் நிலவுகிறது. ஆனால் குஜராத் அணியின் தோல்வியோ 15 ரன்கள் எனும் குறைவான மார்ஜின் மட்டுமே. இவ்வளவு நெருக்கமாக விளையாடி இருக்கின்றனர்.

- Advertisement -

ஆனால் அவை எதுவும் தெரியாத அளவிற்கு பந்துவீச்சு மற்றும் பீல்டிங் இரண்டையும் வைத்து நேர்தியாக கையாண்டார் தோனி. அத்துடன் ஆங்காங்கே சில ஒய்டுகள் வந்தாலும் எங்கேயும் நோ-பால் வீசப்படவில்லை. ஆகையால் எதிரணிக்கு ப்ரீ-ஹிட் மற்றும் சில எளிதான பந்துகள் கொடுக்கப்படாமல் பவுலர்களை கட்டுப்படுத்தினார் தோனி. இந்த விஷயத்தில் தான் மற்ற அணிகள் தவறுகள் செய்கின்றன. ஒய்டுகள் ஒருபோதும் பாதிப்பை ஏற்படுத்தாது. நோபால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்று தோனிக்கு நன்றாக தெரியும்.

நோ-பால் வீசக்கூடாது என்பதை உணர்ந்து தொடரின் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்திவிட்டார். அதேபோல் மிகப்பெரிய பைனலில் எப்படிப்பட்ட அணியையும் வீழ்த்தும் அளவிற்கு அதீத அனுபவம் பெற்றிருக்கிறது சிஎஸ்கே. அதற்கு முக்கிய காரணம் தோனியின் கேப்டன் பொறுப்பு, அணியில் இருக்கும் சீனியர் வீரர்கள் அழுதத்தை கையாண்ட முறை.” என்றார்.