இந்திய டி20 அணியில் முகமது சிராஜ் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் குறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசியிருக்கிறார்.
தற்போது முகமது சிராஜ் இந்திய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணிகளில் இடம் பெற்று வருகிறார். நல்ல பவுலிங் ஃபார்மில் இருக்கும் அவருக்கு இந்திய டி20 அணியில் இடம் கிடைக்கவில்லை. கடந்த முறை டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று விளையாடி இருந்தார். தற்போது அவருக்கு டி20 உலகக் கோப்பை அணியில் இடம் கிடைக்கவில்லை.
இதுகுறித்து ஏபி டிவில்லியர்ஸ் பேசும்போது ” தற்போது இந்திய ஒருநாள் அணியில் சிராஜ் விளையாடி வருகிறார். ஆனால் இந்திய டி20 அணியிலும் உலகக் கோப்பை டி20 அணியிலும் அவர் இல்லாமல் இருப்பது துரதிஷ்டம் என்று சொல்லலாம். இது இந்திய அணியின் சமநிலைக்காகவே நடந்திருக்கிறது”
“உங்களிடம் பும்ரா மற்றும் அர்ஸ்தீப் சிங் இருக்கிறார்கள். ஹர்ஷித் கொஞ்சம் பேட்டிங் செய்யக் கூடியவர். இதனால் உங்களுடைய மூன்று வேகப் பந்துவீச்சாளர்களின் கணக்கு அங்கேயே முடிவுக்கு வந்து விடுகிறது”
“இதனால்தான் சிராஜை விட ஹர்ஷித்தை தேர்வு செய்து இருக்கிறார்கள். சிராஜ் முழுக்க முழுக்க ஒரு பவுலர். எனவே அவரை அவர்கள் தேர்வு செய்யவில்லை. மேற்கொண்டு வேகப்பந்து வீச்சில்ல் கவனம் செலுத்த வேண்டாம் என முடிவு செய்து இருக்கிறார்கள். அவர்களுடைய வேகப் பந்துவீச்சாளர்கள் விக்கெட் எடுத்துக் கொடுத்தால் அதை போனஸ் ஆகவே அவர்கள் பார்க்கிறார்கள்”
இதையும் படிங்க : டி20 உலகக் கோப்பை நாங்கள் இந்தியா வர மாட்டோம்.. இத செய்யுங்க – பங்களாதேஷ் பிடிவாதம்.. காரணம் என்ன?
“இந்தியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற இருக்கின்ற காரணத்தினால் அவர்களது மொத்த கவனமும் சுழல் பந்துவீச்சாளர்கள் மீதுதான் இருக்கிறது. எனவே அதற்கேற்ற வகையில் அவர்கள் அணியை உருவாக்கி இருக்கிறார்கள். இதனால் சிராஜ் இடம் பெற முடியாமல் போயிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.