விராட் கோலி கூறுவது உண்மை தான், அடுத்த ஆண்டு பெங்களூரு அணிக்கு மீண்டும் வரப்போகிறேன் – சஸ்பென்ஸை உடைத்த ஏபி டிவில்லியர்ஸ்

0
293

2011ம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக ஏபி டிவில்லியர்ஸ் 144 இன்னிங்சில் 4691 ரன்கள் குவித்திருக்கிறார். பெங்களூர் அணிக்காக இவருக்கு விளையாடிய இன்னிங்ஸ்களில் இவரது ஆவெரேஜ் 41.20 மற்றும் ஸ்ட்ரைக் ரேட் 158.64 ஆகும்.

2018 ஆம் ஆண்டு சர்வதேச அளவில் தன்னுடைய ஓய்வு அறிக்கையை அவர் வெளியிட்டார். நிச்சயம் இன்னும் பல ஆண்டுகள் பெங்களூரு அணிகள் அவர் விளையாடுவார் என்று எதிர்பார்த்த நிலையில் கடந்த ஆண்டு, ஐபிஎல் தொடரில் இருந்தும் தன் ஓய்வு பெறுவதாக அறிவித்து இருந்தார்.

- Advertisement -

அடுத்த ஆண்டு மீண்டும் பெங்களூரு அணியில் ஏபி டிவில்லியர்ஸ்

சமீபத்தில் பேசிய பெங்களூரு அணியின் ஆஸ்தான வீரரும் இந்திய முன்னாள் கேப்டன் விராட் கோலி ஒரு சில விஷயத்தை பகிர்ந்து கொண்டார்.”ஏபி டிவில்லியர்ஸ் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பங்கெடுத்துக்கொள்ள அதிக வாய்ப்பு உள்ளது என்று கூறினார். நான் உணர்ச்சி வசப்பட்டு சஸ்பென்ஸை உடைத்து விட்டேனோ என்றும் புன்னகைத்தார்.

விராட் கோலி கூறியதை குறிப்பிட்டு தற்பொழுது ஏபி டிவில்லியர்ஸ் ஒரு சில விஷயங்களை அதிகாரபூர்வமாக தெரிவித்திருக்கிறார்.”விராட் கோலி வாயிலாக அது உறுதிப்பட்டது மிகவும் சந்தோஷமான விஷயம். ஆம் நான் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மீண்டும் களமிறங்க தயாராக இருக்கிறேன். மீண்டும் எனது பெங்களூர் அணியில் இணைய போகிறேன்.

- Advertisement -

என்ன ரோலில் நான் அடுத்த ஆண்டு பெங்களூர் அணியில் பங்கெடுத்துக்கொள்ள போகிறேன் என்பது இன்னும் முடிவாகவில்லை. ஆனால் நிச்சயமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் நான் ஒரு அங்கமாக இருப்பேன் என்று உறுதி அளித்திருக்கிறார். பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ரசிகர்கள் முன்பாக மீண்டும் பெங்களூரு ஜெர்ஸியில் களம் இறங்கப் போவது எனக்கு சந்தோஷம் என்றும் கூறியுள்ளார்.

நிச்சயமாக அடுத்த ஆண்டு ஏபி டிவில்லியர்ஸ் ஏதேனும் ஒரு முக்கிய பொறுப்பை வகிக்க போகிறார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசி வருகின்றனர்.