இந்திய நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன்கள் ஆரோன் பின்ச் மற்றும் மைக்கேல் கிளார்க் இருவரும் மனம் திறந்து பாராட்டி பேசி இருக்கிறார்கள்.
தற்போது நடைபெற்று வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் பும்ரா முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் 21 விக்கெட்டுகள் கைப்பற்றி இந்த தொடரில் அதிக விக்கெட் கைப்பற்றிய பந்துவீச்சாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வேகப்பந்துவீச்சாளர் பும்ரா பந்துவீச்சில் சிக்கி டெஸ்ட் கிரிக்கெட்டில் தங்களுடைய இடத்தை இழந்த துவக்க ஆட்டக்காரர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இந்த இடத்தில் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் வருகிறார். மேலும் இதே ஆஸ்திரேலியா அணியில் மேத்யூ வேட் இருக்கிறார். மேலும் இங்கிலாந்து முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் பும்ரா பந்துவீச்சில் சிக்கி தனது இடத்தை இழந்தார்.
தற்போது இதன் தொடர்ச்சியாக ஆஸ்திரேலிய இளம் தொடக்க ஆட்டக்காரர் நாதன் மெக்ஸ்வீனி தன்னுடைய இடத்தை இழந்திருக்கிறார். ஒரு வீரரின் இடத்தை காலி செய்யும் அளவுக்கு பும்ரா பந்துவீச்சு மிகப்பெரிய தாக்கத்தை உண்டாக்கக் கூடியதாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ஆரோன் பின்ச் கூறும் பொழுது “பும்ரா ஒரு உலகத்தரம் வாய்ந்த பந்துவீச்சாளர். நாம் இந்த நாட்டில் காலங்காலமாக பார்த்த சிறந்த பந்துவீச்சாளர்களில் அவரும் ஒருவர். அவர்களில் ராக்கிங் நாற்காலிகளில் இருக்கிறார்கள். முன்னும் பின்னுமாக சென்று ‘வேண்டாம் மீண்டும் என்னிடம் வராதீர்கள் பும்ரா என்று அவரிடம் சொல்ல வேண்டும்’. அந்தளவிற்கு அவர் சிறந்தவர்” என்று கூறி இருக்கிறார்.
இதையும் படிங்க : தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்.. பாகிஸ்தான் அதிரடி மாற்ற பிளேயிங் XI அறிவிப்பு.. இந்திய அணிக்கு உதவுமா?
பும்ரா குறித்து மைக்கல் கிளார்க் பேசும் பொழுது “பும்ரா மூன்று வடிவங்களிலும் சிறந்த பந்துவீச்சாளர். இந்த கோடைகாலத்தில் தன்னை சிறந்த டெஸ்ட் பந்துவீச்சாளர் என்றும் நிரூபித்திருக்கிறார். தற்போது இங்கு கோடைகாலத்தில் பந்து வீசுவதற்கு புதிய பந்தில் நல்ல நிலைமைகள் இருந்து வருகிறது. இருந்த போதிலும் கூட பும்ரா செய்திருக்கும் சாதனைகளை எதுவென்றாலும் மறைத்து விட முடியாது” என்று கூறியிருக்கிறார்.