இலங்கை அணி உள்நாட்டில் இந்திய அணிக்கு எதிராக 27 வருடங்கள் கழித்து ஒரு நாள் கிரிக்கெட் தொடரை கைப்பற்றியதும் நல்ல உற்சாகமான அணியாக காணப்படுகிறது. இந்த நிலையில் அந்த அணியின் பந்துவீச்சு பயிற்சி பயிற்சியாளர் பாகிஸ்தானை சேர்ந்த ஆகிப் ஜாவேத் இலங்கை வேகப்பத்துவீச்சாளர் அசிதா பெர்னாடோ பற்றி முக்கிய கருத்து ஒன்றைக் கூறி இருக்கிறார்.
வலதுகை வேகப்பந்துவீச்சாளரான அசிதா பெர்னாடோ இலங்கை வெள்ளை பந்து அணிகளில் பெரிய வாய்ப்பு பெறாமல் இருந்து வந்தார். அதே சமயத்தில் அவருக்கு இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியில் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தது. கடந்த முறை முக்கிய வேகப்பந்துவீச்சாளர்கள் காயமடைய இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் வாய்ப்பு கிடைத்து மிக அற்புதமாகச் செயல்பட்டார்.
ஆண்டர்சன் வியந்த முகமது ஆசிப்
வேகப்பந்து வீச்சில் வாபுல் சீம் எனப்படும் பந்துவீச்சு நுட்பத்தை கண்டறிந்தவர் ஆகவே முகமது ஆசிப் கருதப்படுகிறார். கையில் இருந்து செல்லும் பந்து காற்றில் இடது வலது என இரு பக்கமும் ஆடிய படியே செல்லும். அடுத்து பந்து தரையில் விழுந்ததும் எந்த பக்கம் போகும் என்பது யாருக்கும் தெரியாது. மேலும் முகமது ஆசிப் மணிக்கட்டில் எந்த மாற்றத்தையும் காட்டாமல் பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய முடிந்தவர்.
உலகக் கிரிக்கெட்டில் ஸ்விங் கிங் என்று அழைக்கப்படும் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் வாபுல் சீம் பந்துவீச்சு நுட்பத்தை பாகிஸ்தானின் முகமது ஆசிப்பிடம் இருந்துதான் எடுத்துக் கொண்டார். மேலும் அவரைப்போலவே அதே சீமில் பந்தை ஸ்விங் செய்யவும் சிறப்பான முறையில் தயாராகிக் கொண்டார்.
அசிதா பெர்னாடோ அரிய திறமை
இந்த நிலையில் இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் பாகிஸ்தானின் ஆகிப் ஜாவேத் கூறும் பொழுது ” பாகிஸ்தானின் முகமது ஆசிப்புக்குப் பிறகு மணிக்கட்டை மாற்றிக் கொள்ளாமல் பந்தை இரண்டு பக்கமும் ஸ்பிங் செய்யக்கூடிய திறமை அசிதா பெர்னாடோவிடம் இருந்ததை நான் பார்த்தேன். அவரிடம் இருக்கும் இந்த திறமை பற்றி பலருக்கும் தெரியாது. இதை அவரிடம் நான்தான் கூறினேன்.
இதையும் படிங்க : உலக கிரிக்கெட்டில் அடுத்த ஜோ ரூட்டும் இவர்தான்.. கெவின் பீட்டர்சனும் இவர்தான் – ஸ்டூவர்ட் பிராட் கணிப்பு
ஆசிப்பை பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு நான்தான் தேர்ந்தெடுத்தேன். இதனால்தான் அவரைப் பற்றி நிறைய விஷயங்கள் தெரியும். அசிதாவுக்கு தற்பொழுது நிறைய நம்பிக்கை நிலைகள் வந்திருக்கிறது. பந்தை இரண்டு பக்கமும் ஸ்விங் செய்ய பந்துவீச்சாளர்கள் மணிக்கட்டை மாற்றிக் கொள்வார்கள். ஆனால் அசிதாவுக்கு அப்படி கிடையாது. அவர் மணிக்கட்டை ஒரே மாதிரி வைத்து இரண்டு பக்கமும் பந்தை ஸ்விங் செய்வார். இதனால் பேட்ஸ்மேன்களுக்கு பந்து எங்கு வருகிறது என்று தெரியாது. இது ஒரு அரிய திறமை” என்று கூறியிருக்கிறார்.