ஐபிஎல் 2024

சிஎஸ்கேவின் வெற்றி பார்முலா இதுதான். 2 வேலைய செய்யுற ஆள தேடுறாங்க – ஆகாஷ் சோப்ரா கணிப்பு

ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நாளை தொடங்க உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சென்னை அணி குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கிய கருத்துகளை பேசி இருக்கிறார்.

சென்னை அணியின் பலம்

கடந்த ஆண்டு இறுதியில் நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கம் மைதானத்திற்கு தகுந்தவாறு வீரர்களை தேர்வு செய்தது. இதில் குறிப்பாக ரவிச்சந்திரன் அஸ்வின், மற்றும் ஆப்கானிஸ்தான் அணி வீரர் நூர் அகமது உள்ளிட்ட வீரர்களை அதிகமான தொகை கொடுத்து வாங்கினார்கள். இவர்கள் இருவருமே சுழற் பந்துவீச்சில் பெரிய ஜாம்பவான்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டுமல்லாமல் கடந்த ஆண்டு சென்னை அணியில் விளையாடிய ரச்சின் ரவிந்த்ரா மற்றும் பஞ்சாப் அணியில் விளையாடிய சாம் கரண் உள்ளிட்ட ஆல் ரவுண்டர் வீரர்களையும் தேர்வு செய்தது.

சிஎஸ்கே எப்போதுமே ஆல்ரவுண்டர் வீரர்களை தேர்வு செய்வதில் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் அணியாக இருக்கும்போது இந்த முறையும் அதே பார்முலாவை பின்பற்றி அதிகமான ஆல் ரவுண்டர் வீரர்களை தேர்வு செய்து இருக்கிறது. இந்த சூழ்நிலையில் அது குறித்து இந்திய முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில முக்கியமான கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

ஒரே நேரத்தில் இரு வேலை

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” சென்னை அணியை பொறுத்த வரை மிகப் பெரிய பலம் என்றால் அவர்களது ஆல்ரவுண்டர்கள்தான். இந்த அணியில் அதிகமான ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள். ரச்சின் ரவீந்திரா மற்றும் சிவம்தூபே ஆகியோர் பந்து வீசக்கூடியவர்களாக இருக்கிறார்கள். ரவீந்திர ஜடேஜா ஆல் ரவுண்டராக இருக்கிறார். எம் எஸ் தோனி ஒரு சரியான பேட்ஸ்மேன். ரவிச்சந்திரன் அஸ்வின் ஆல் பேட்டிங் செய்ய முடியும். சாம் கரண் மற்றும் ஜேமி ஓவர்டன் ஆகியோரும் பேட்டிங்கில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்குவார்கள்.

இதையும் படிங்க:ஐபிஎல் மட்டுமல்ல.. இந்தியாவின் ஆதிக்கத்தால் உலகின் எந்த டி20 லீக்கிலும் பாக் வீரர்கள் விளையாட முடியாது – நியூசி இயான் ஸ்மித்

சிஎஸ்கே இரண்டு வேலைகளை செய்யும் வீரர்களை தேர்ந்தெடுக்க முயற்சி செய்கிறது. அதனால் தான் அவர்களிடம் ஆல் ரவுண்டிங் திறன் அதிகமாக உள்ளது. அவர்களிடம் அனுபவம் மற்றும் நிபுணத்துவம் உள்ளது அதனால் தான் எப்போதும் அவர்கள் அனுபவம் வாய்ந்த அணியை உருவாக்குகிறார்கள். டெவன் கான்வே, ருதுராஜ் கெய்வாட், ஜடேஜா, அஷ்வின் அல்லது தோனி என யாராக இருந்தாலும் அவர்களிடம் நிறைய அனுபவம் இருக்கிறது. ஒவ்வொரு நபர்களையும் தனித்தனியாக பார்த்தால் அவர்களிடம் தரத்தை காணலாம்” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -
Published by

Recent Posts