ஐபிஎல் மட்டுமல்ல.. இந்தியாவின் ஆதிக்கத்தால் உலகின் எந்த டி20 லீக்கிலும் பாக் வீரர்கள் விளையாட முடியாது – நியூசி இயான் ஸ்மித்

0
351

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாகிஸ்தான் அணி மிக மோசமான தோல்விகளை சந்தித்து லீக் சுற்றிலேயே வெளியேறியது. மேலும் அந்த அணியின் டி20 வளர்ச்சியும் பெரிய அளவில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை.

இந்த சூழ்நிலையில் நியூசிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், இயான் ஸ்மித் பாகிஸ்தான் வீரர்கள் குறித்தும் ஐபிஎல் தொடரில் அவர்கள் கலந்து கொள்ள முடியாத விதம் குறித்தும் சில முக்கிய கருத்துக்களை பேசியிருக்கிறார்.

- Advertisement -

2008 ஆம் ஆண்டு முதன் முதலாக ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினார்கள். அதற்குப் பின்னர் மும்பையில் ஏற்பட்ட பாதுகாப்பு பிரச்சினைகளின் காரணமாக அந்த ஆண்டோடு பாகிஸ்தான் வீரர்கள் விளையாடுவதற்கு பிசிசிஐ முற்றிலுமாக தடை விதித்தது. உலக கிரிக்கெட் வீரர்கள் ஐபிஎல் தொடரில் பெறும் வருவாய் போன்று பாகிஸ்தான் வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களால் அதுபோன்ற ஊதியத்தை ஈட்ட முடியவில்லை. அதேபோல உலக நாடுகளில் நடைபெறும் டி20 நிகழ்வுகளில் இந்திய வர்த்தகம் முக்கிய பங்கு வகிப்பதால் அதிலும் பாகிஸ்தான் வீரர்களால் கலந்து கொள்ள முடியவில்லை.

இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் டி20 கிரிக்கெட்டின் வீழ்ச்சி குறித்து முன்னாள் நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ஸ்மித் சில கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார். நியூசிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் இரண்டு டி20 போட்டிகளில் இரண்டிலும் பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது. இந்த சூழ்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் வருவாய் குறித்தும் அந்த அணியின் வீழ்ச்சி குறித்தும் சில முக்கிய கருத்துகளை பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “பாகிஸ்தான் வீரர்கள் ஐபிஎல் தொடரில் விளையாடி அந்த செல்வத்தை சம்பாதிக்க முடியாது. மேலும் உலகெங்கிலும் விளையாடப்படும் பல டி20 பிரான்சிஸ் லீக்குகளின் அணிகள் பெரும்பாலும் இந்தியாவுக்கு சொந்தமானவையாக இருக்கிறது. எனவே பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு இது ஒரு நிலையற்ற சூழலாக இருக்கிறது. பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொருத்தவரை வாரியம், நிர்வாக ஊழியர்கள், தேர்வாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்கள் என யாரிடமும் ஒரு தடியடி கூட செய்ய முடியாத அளவுக்கு அதிகமான பணியாளர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க:என் கஷ்ட காலத்தில் ஆதரவு அளித்தது விராட் பாய்தான்.. ஆர்சிபியை விட்டு வெளியேறியது கஷ்டமா இருந்துச்சு – சிராஜ் பேட்டி

எந்த ஒரு கட்டத்திலும் உங்களுக்கும், உங்கள் நண்பர்களுக்கும் நான் ஒரு சவால் விடுகிறேன். கடைசியாக 10 பாகிஸ்தான் கேப்டனின் பெயர்களை கூறுவேன். அவர்கள் அனைவரையும் வரிசைப்படுத்த நீங்கள் குறைந்தது ஏழு ஆண்டுகளாவது பின்னோக்கிச் செல்ல வேண்டி இருக்கும் என்று நான் நிச்சயம் பந்தயம் கட்டுவேன். இதுதான் உலக கிரிக்கெட்டில் பாகிஸ்தான் அணியின் தற்போதைய நிலை” என்று பேசியிருக்கிறார்.

- Advertisement -