ஐபிஎல் தொடரின் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறப் போவது இந்த நான்கு அணிகள் தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

0
412
Aakash Chopra

ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் 19-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் தொடங்கிய இந்த தொடர் கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. அப்படி தள்ளிவைக்கப்பட்ட மீதமுள்ள போட்டிகள் எல்லாம் தற்போது அமீரக மைதானங்களில் தொடங்க இருக்கிறது. அமீரக தேசத்தில் உள்ள மூன்று முக்கிய மைதானங்களில் இந்த ஆட்டங்கள் நடைபெற உள்ளன. புதிய தொடராக ஆரம்பிக்காமல் முதல் பகுதி எந்த இடத்தில் கைவிடப்பட்டது அதை இடத்திலிருந்து தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன.

அடுத்த சுற்றுக்கு தகுதி பெற போகும் 4 அணிகள் எது என்பதைக் குறித்து தற்போதைய ரசிகர்களுக்கு கேள்விகள் எழ ஆரம்பித்து விட்டன. இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் கேள்வி பதில் நிகழ்ச்சி ஒன்றை நடத்திக் கொண்டிருந்தபோது இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் நான்கு அணிகள் எவை? என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார்.

- Advertisement -

அதற்கு பதிலளித்த ஆகாஷ் சோப்ரா தற்போது புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் நான்கு அடிகளால் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும் என்று தான் கருதுவதாக கூறினார். பெரிய மாற்றங்கள் வேறு எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் அவர் கூறினார். டெல்லி, சென்னை, பெங்களூரு மற்றும் மும்பை அணிகள் முறையே முதல் நான்கு இடத்தில் தற்போது புள்ளி பட்டியலில் உள்ளன.

எப்போதும் சற்று குறைவாகவே வெற்றிகளைப் பெறும் பெங்களூரு அணி இந்த முறை சிறப்பாக விளையாடி புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தற்போது புள்ளி பட்டியலில் முதலிடத்தில் டெல்லி அணி உள்ளது. இதுவரை விளையாடிய 8 ஆட்டங்களில் 6 ஆட்டங்களில் டெல்லி அணி வென்றுள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை அணியில் இரண்டு அணிகளும் ஏழு ஆட்டங்களில் விளையாடி 5 வெற்றிகளைப் பெற்றுள்ளது. இந்த இரண்டு அணிகளும் முறையே இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்தில் உள்ளன. ஐபிஎல் தொடரில் சக்தி வாய்ந்த அணியாக கருதப்படும் மும்பை அணி தற்போது 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

ஆகாஷ் சோப்ரா கூறியதுபோல இந்த நான்கு அணிகள் தான் தகுதி பெற போகிறதா அல்லது வேறு அணிகள் எதுவும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறுமா என்று அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -