இந்திய கிரிக்கெட்

எல்பிடபிள்யூ சர்ச்சை.. உண்மை என்னன்னு கோலிக்கு நல்லா தெரியும்.. நடந்தது இதுதான்.. ஆகாஷ் சோப்ரா பேட்டி

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் இந்திய அணி 32 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து சிக்கலில் உள்ளது. இந்த நாள் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது

- Advertisement -

இந்த சூழ்நிலையில் விராட் கோலியின் எல்பிடபிள்யூ நிகழ்வு சர்ச்சையான நிலையில் இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான ஆகாஷ் சோப்ரா ஆச்சரியம் அளிக்கும் வகையில் தனது கருத்தை தெரிவித்து இருக்கிறார்.

இலங்கை அணிக்கு எதிராக நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 240 ரன்கள் குவித்தது. அதற்குப் பின்னர் களமிறங்கிய இந்திய அணியில் ரோகித் சர்மா சிறப்பான அடித்தளம் அமைத்து வெளியேற, அதற்குப் பிறகு களம் இறங்கிய கோலி விளையாடிக் கொண்டிருந்தார். ஆட்டத்தின் 15வது ஓவரில் அகில தனஞ்செயாவின் கடைசி பந்தில் விராட் கோலி எல்பிடபிள்யூ ஆனார்.

இதனைப் பார்த்த கள நடுவரும் அவுட் என வழங்க உடனே விராட் கோலி இந்த முடிவை எதிர்த்து அப்பீல் செய்தார். பின்னர் பந்து கால் பேடுகளில் படுவதற்கு முன்னால் பேட்டில் படுவது போல் டிவி ரிப்ளையில் தெரிய வர இதனைப் பார்த்த விராட் கோலி புன்னகைத்து மீண்டும் பேட்டிங் செய்யச் சென்றார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா பந்து பேட்டில் படவில்லை என்று விராட் கோலிக்கும் தெரியும். ஆனால் அந்த அவுட் நாட் அவுட் என்று கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறி ஆச்சரியப்பட வைத்திருக்கிறார்.

- Advertisement -

இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி ஆட்டம் இழந்த விதம் மிகவும் சுவாரசியமானது. பந்து அவரது கால் பேடுகளில் பட்டவுடன் விராட் கோலி ரிவ்யூவுக்கு சென்றார். ஆனால் பந்து பேட்டில் படவில்லை என்பது அவருக்கும் தெரியும். ஆனால் பந்து அல்ட்ரா எட்ஜில் பேட்டில் பட்டது போல தெரிந்துள்ளது. இது அகில தனஞ்செயாவின் விக்கெட்டாக இருக்கும் என்று அனைவரும் கருதியதால் பெரிய பிரச்சினையாக மாறியது.

மேலும் எதிர் அணியின் பந்துவீச்சாளர்கள் சிறந்த தரத்தில் இல்லாவிட்டாலும் நாங்கள் பேட்டிங்கில் சிரமப்படுகிறோம். ஏனென்றால் இது போன்ற ஆடுகளத்தில் நாங்கள் நீண்ட காலம் பழகவில்லை. பிளாட் டிராக்குகளில் எங்களது பேட்டிங் செயல்பாடு சிறப்பாக உள்ளது. சுழற் பந்துவீச்சில் கூட பெரும்பாலும் அணிகளை விட சிறப்பாக செயல்படுகிறோம். ஆனால் பந்து சுழலில் திரும்பும்போது நாங்கள் சிக்கலில் மாட்டிக் கொள்கிறோம்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:மீண்டும் சிஎஸ்கே ஆர்சிபி.. மகளிர் ஐபிஎல் தொடரிலும் களமிறங்கும் சென்னை அணி.. வெளியான தகவல்கள்

அதாவது பந்து பேட்டில் படவில்லை என்றும், அல்ட்ரா எட்ஜில் ஏற்பட்ட குளறுபடியின் காரணமாக அது அவுட் கொடுக்க மறுக்கப்பட்டது என்று மறைமுகமாக சாடி இருக்கிறார். அந்த வாய்ப்பில் விராட் கோலி தப்பித்தாலும் 14 ரன்கள் மட்டுமே எடுத்து வாண்டர்சேவின் பந்துவீச்சில் வெளியேறினார்.

- Advertisement -
Published by

Recent Posts