இந்த 4 வீரர்கள் பெங்களூர் அணிக்குத் தேவையில்லை ; அடுத்த ஆண்டு அணியை விட்டு நீக்குங்கள் – ஆகாஷ் சோப்ரா வலியுறுத்தல்

0
94
Aakash Chopra and Mohammad Siraj

ஐ.பி.எல் தொடருக்கு மெகா ஏலம் நடக்கின்ற ஆண்டு எவ்வளவு முக்கியமானதோ அதேபோல் அதற்கடுத்த ஆண்டுமே முக்கியமானது. அணிகளின் தங்களின் குறைகளைச் சரிசெய்ய சில வீரர்களை வெளியேவிட்டு சில வீரர்களை மினி ஏலத்தில் வாங்கி, அணியை பழுதுபார்ப்பார்கள்.

இதில் சில வீரர்கள் புதிய அணிகளில் சிறப்பாய் பொருந்திபோவார்கள். இப்படி அடுத்த ஆண்டு ஐ.பி.எல் தொடருக்கு பெங்களூர் அணி வெளியேவிட வேண்டிய வீரர்கள் என்று நான்கு வீரர்களை இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா நான்கு வீரர்களின் பெயர்களைத் தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -
மொகம்மத் சிராஜ்

பெங்களூர் அணியில் ஏழு கோடிக்குத் தக்கவைக்கப்பட்ட சிராஜின் பந்துவீச்சு கடந்த ஆண்டைபோல் சிறப்பாக இல்லையென்பதே உண்மை. கடந்த ஐ.பி.எல் தொடரில் அதிரடி சூரர் ஆன்ட்ரூ ரஸலுக்கு மிகச்சிறப்பாக வைட் யார்க்கர்கள் வீசி, க்ரீசில் நடனமாட வைத்திருப்பார். ஆனால் இந்தத் தொடரில் லைன்&லென்த்தில் சொதப்பி அதிக சிக்ஸர்கள் தந்த பாஸ்ட் பவுலராக இருந்தார்.

அனுஜ் ராவஜ்

உள்நாட்டு போட்டிகளில் டெல்லி அணிக்காக விளையாடும் இந்த 22 வயது இளைஞரை 3.4கோடி கொடுத்து வாங்கி, கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் உடன் ஓபனராய் விளையாட வைத்தது பெங்களூர் அணி நிர்வாகம். ஆனால் இவர் 8 ஆட்டங்களில் 129 ரன்களையே அடித்தார். தற்போது விராட்கோலி ஓபனிங் விளையாடுவதாலும், விராட்கோலியின் ஒன்டவுன் இடத்திற்கு ரஜத் பட்டிதார் கிடைத்திருப்பதும், அனுஜ் ராவத்தை பெங்களூர் அணி வெளியேவிட வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

டேவிட் வில்லி

மெகா ஏலத்தில் இரண்டு கோடிக்கு வாங்கப்பட்ட இந்த இங்கிலாந்து மீடியம் பாஸ்ட் பவுலிங் ஆல்ரவுண்டர், இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் விளையாடியது நான்கு போட்டிகள், அடித்த ரன்கள் 18, எடுத்த விக்கெட்டுகள் ஒன்றே ஒன்று. ஹர்சல் படேல் பேட்டிங் செய்வதும், ஷாபாஸ் அகமத், மேக்ஸ்வெல் ஸ்பின் ஆல்ரவுண்டர்களாக இருப்பதும், வெளிநாட்டு ஸ்பின்னர் ஹசரங்கா அணியின் நிரந்த வீரராக இருப்பதும் இவருக்கு அணிக்குள் இடமில்லாமல் செய்கிறது.

- Advertisement -
செர்பான் ரூதர்போர்டு

மெகா ஏலத்தில் 1 கோடிக்கு வாங்கப்பட்ட இந்த கரீபியன் பேட்ஸ்மேனின் நிலையும் டேவிட் வில்லியின் நிலையைப் போலத்தான். இவரும் பெங்களூர் அணிக்கான வீரர் கிடையாது. எப்படி பார்த்தாலும் இவருக்கு பெங்களூர் அணியில் இடமே இல்லை. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று ஆட்டங்களில் இவர் எடுத்தது 33 ரன்களே.

இந்த நான்கு வீரர்களையும் வெளியே விடுவதால் பெங்களூர் அணிக்கு 13.40 கோடி கிடைக்கும். இதன்மூலம் மினி ஏலத்தில் அணிக்குத் தேவையான மற்றும் பொருந்தக்கூடிய வீரர்களை எடுத்துக்கொள்ளலாம் என்று ஆகாஷ்சோப்ரா கூறியிருக்கிறார். கடந்த மூன்று ஐபிஎல் சீசன்களில் பெங்களூர் அணி ப்ளேஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறினாலும் பெரிய அணிகளை வெல்வதற்கான பலத்தோடு இல்லாமல் இருப்பது குறிப்பிடத்தக்கது!