இந்திய கிரிக்கெட்

கம்பீர் பிளான் பக்காவா இருக்கு.. 3 வருஷத்துக்கு அப்ரோ இவரு டீம்ல விளையாடுறது இதுக்காகத்தான் – ஆகாஷ் சோப்ரா கருத்து

இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையே டி20 கிரிக்கெட் தொடர் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றியுள்ளது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா 2026ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ள டி20 உலக கோப்பை குறித்து சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

வருண் சக்கரவர்த்தி கம்பேக்

சமீபத்தில் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை இந்திய அணி வெற்றி பெற்று வரலாறு படைத்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஓய்வு பெற்றதை அடுத்து அடுத்த டி20 அணியின் கேப்டனாக சூரியகுமார் யாதவ் நியமிக்கப்பட்டார். கடந்த 2021ஆம் ஆண்டு டி20 உலக கோப்பைக்கு பிறகு இந்திய அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்ட தமிழக வீரரான வருண் சக்கரவர்த்தி தற்போது மூன்று வருடங்கள் கழித்து வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.

முதல் போட்டியில் ஓரளவு நன்றாக வீசி மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தாலும் இரண்டாவது போட்டியில் அதைவிட சிறப்பாக வீசி குறைந்த ரன்களை விட்டுக் கொடுத்து இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். மேலும் 2026 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை இந்தியாவில் நடைபெற இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணி அதற்கேற்றவாறு திட்டங்களை தீட்டி வருண் சக்கரவர்த்தியை மீண்டும் அணிக்குள் கொண்டு வந்திருக்கிறது என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

அடுத்த உலக கோப்பை இந்தியாவில்

இது குறித்து ஆகாஷ் சோப்ரா விரிவாக கூறும்போது “வருண் சக்கரவர்த்தி மீண்டும் கம்பேக் கொடுத்தாரா? என்று கேட்டால் அது ஒரு பெரிய கேள்வி. ஏனென்றால் அவர் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பவும் இந்திய அணிக்குள் நுழைந்திருக்கிறார். முதல் போட்டியில் வருண் சக்கரவர்த்தி மூன்று விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். இருந்தாலும் முதல் போட்டியை விட அவர் இரண்டாவது போட்டியில் நன்றாகவே பந்து வீசி இருக்கிறார்.

இதையும் படிங்க:நாளை 2வது டி20.. சாம்சனுக்கு வாய்ப்பு தொடருமா?.. கம்பீர் செய்யும் 2 மாற்றங்கள்.. ஒயிட் வாஷ் எதிர்பார்ப்பு

அவரது பந்துவீச்சில் அதிக நிலை தன்மையும் அதிக அளவிலான நம்பிக்கையும் வெளிப்பட்டது. அவர் தொடர்ந்து மூன்று ஸ்டம்ப்களை குறி வைத்து பந்து வீசினார். இதுவரை வந்த அறிகுறிகள் அனைத்துமே நன்றாக இருக்கிறது. வருண் சக்கரவர்த்தி எதற்காக விளையாட வேண்டும் என்று கேட்டால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு டி20 உலகக் கோப்பை இந்தியாவில் நடைபெற உள்ள காரணத்தினால் தான்” என்று கூறலாம் என்று கூறியிருக்கிறார். டி20 உலக கோப்பைகாக வருணை கம்பீர் தலைமையிலான இந்திய அணி தயார்படுத்துகிறது என்று ஆகாஷ் சோப்ரா கூறி இருக்கிறார்.

- Advertisement -
Published by