இங்கிலாந்து கேப்டன் ஜோஸ் பட்லரிடம் இருந்து எப்படி பேட்டிங் செய்வது என இங்கிலாந்து இளம் வீரர்கள் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆகாஷ் சோப்ரா அறிவுரை கூறியிருக்கிறார்.
தற்போது இங்கிலாந்து அணியின் பேட்டிங் அணுகுமுறை மிகவும் ஆக்ரோஷமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அந்த அணியின் இளம் வீரர்கள் பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் இருவரும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த தொடரில் நடைபெற்று முடிந்திருக்கும் மூன்று போட்டியிலும் அவர்களுடைய பேட்டிங் மிகவும் சுமாராக இருந்து வருகிறது.
ஜோஸ் பட்லரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும்
இதுகுறித்து ஆகாஷ் சோப்ரா பேசும் பொழுது “ஜோஸ் பட்லர் இடம் இருந்து பில் சால்ட் மற்றும் ஹாரி புரூக் என்ன கற்றுக் கொள்ளலாம்? இது ஒரு நல்ல கேள்வி. ஏனென்றால் அவர்கள் இந்த தொடரில் மிகச் சிறப்பாக விளையாடி வரும் அவர்களுடைய கேப்டனிடம் இருந்து ஏதாவது கற்றுக் கொண்டாக வேண்டும். ஜோஸ் பட்லர் இன்னிங்ஸ் நல்ல முறையில் கட்டுப்படுத்துகிறார் மேலும் ரன்களையும் அடிக்கிறார். குறிப்பாக இதற்கு அவர் பந்தை நல்ல முறையில் ரீட் செய்கிறார்”
“இங்கு அதிக ஆக்ரோஷமான பேட்டிங் அணுகுமுறை வெற்றி பெறாது. உங்களிடம் தெளிவான திட்டங்கள் இருக்க வேண்டும். நீங்கள் ரன்கள் எடுப்பதற்கு ஒரு வழியை கண்டுபிடிக்க வேண்டும். பட்லர் தன்னுடைய மகத்தான அனுபவத்தை முன்னே கொண்டு வந்து திட்டங்களை செயல்படுத்துகிறார். அவர் ஒவ்வொரு முறையும் ரன்களை கொண்டு வருகிறார்”
ஜோஸ் பட்லரின் திறமை
“அவருக்கு எங்கு ரன்கள் எடுக்க வேண்டும்? என்பது குறித்து நன்றாக தெரியும். அவர் கிரீசில் இருந்து இறங்கி நேராக அடிப்பார். அவர் பாட்டம் ஹாண்ட் பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்துவதால் அவர் ஆன்சைட் விளையாடுவதை விரும்புகிறார். அவர் தன்னுடைய ரைட் ஹாண்டை நல்ல முறையில் பயன்படுத்துகிறார். அவர் எந்த பந்துவீச்சாளரை அடிக்க வேண்டும்? என்றும் சரியாக தேர்ந்தெடுக்கிறார்”
இதையும் படிங்க : இன்னும் 3 விக்கெட்.. வருண் சக்கரவர்த்தி படைக்க இருக்கும் மெகா சாதனை.. அவருக்கு அவரே போட்டி
“பட்லர் பந்துவீச்சாளரின் கையில் இருந்து பந்தை கணிக்கிறார். அவர் பொறுப்பற்ற முறையில் விளையாடுவது கிடையாது. ஆனால் புரூக் பந்தை பந்து வீச்சாளரின் கையில் இருந்து கணிக்க முடியாமல் சிரமப்படுகிறார். ஒரு சுழல் பந்துவீச்சாளர் பந்தை கையில் இருந்து விடுவித்ததும், முதலில் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது, அந்தப் பந்தை நீங்கள் முன் காலில் விளையாட வேண்டுமா? அல்லது பின் காலில் விளையாட வேண்டுமா? என்பதுதான். இதை புரூக் சரிவர செய்ய முடியவில்லை” என்று கூறி இருக்கிறார்.