அஸ்வின் வந்தாலே, வார்னர் நடையை கட்றாரு! – அறிவுரை சொன்ன ஆகாஷ் சோப்ரா

0
388

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வியை தழுவியதற்கு அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களின் மோசமான ஆட்டமும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.குறிப்பாக 100 டெஸ்ட் போட்டிகளுக்கு மேல் விளையாடிய டேவிட் வார்னர் முதல் டெஸ்டில் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டம் இழந்து அதிர்ச்சி ஏற்படுத்தினார்.

- Advertisement -

குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸில் வார்னர். அஸ்வின் இடம் ஆட்டமிழந்தார். இதன் மூலம் 19 இன்னிங்ஸில் அஸ்வினிடம் 11 முறை டேவிட் வார்னர் ஆட்டம் இழந்து இருக்கிறார். இது குறித்து பேசி உள்ள ஆகாஷ் சோப்ரா, அஸ்வின் உள்ளே வந்தாலே வார்னர் பெவிலியனை நோக்கி நடந்து விடுகிறார் என்று குறிப்பிட்டுள்ளார். உஸ்மான் காஜா கிரிக்கெட்டில் இப்போதுதான் ஆடத் தொடங்கி இருப்பதால் அவரை நான் குறை சொல்ல விரும்பவில்லை. ஆனால் நூறு போட்டிகளுக்கு மேல் விளையாடியுள்ள வார்னர் அஸ்வின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறுகிறார்.

வார்னரின் கேட்ச்சை விராட் கோலி விட்ட போது கூட யாரும் பெரிதாக கவலைப்படவில்லை. காரணம் அவர் எப்படியாவது மீண்டும்  ஆட்டம் இழந்து விடுவார் என வீரர்கள் நினைத்தனர்.இந்தியா அதே ஆடுகளத்தில் 400 ரன்கள் அடித்து மீண்டும் நீங்கள் பேட்டிங்க்கு வரும் போது உங்களிடம் கொஞ்சம் கூடுதலாக தான் ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். மார்னஸ் லாபஸ்சேன் மற்றும் ஸ்டீவன் ஸ்மித் இருவதும் நன்றாக விளையாடினாலும் தனியாக அவர்களால் என்ன செய்ய முடியும். அவர்களுக்கு தேவையான ஆதரவை வேறு மற்ற பேட்ஸ்மேன்கள் கொடுக்கவே இல்லையே.

சுழற் பந்துவீச்சை விளையாடுவதற்கு என்று ஒரு முறை இருக்கிறது ஒன்று நீங்கள் முன்னோக்கி விளையாட வேண்டும். இல்லை அதனை பின்னோக்கி விளையாட வேண்டும். சைடில் நீங்கள் நகர்ந்து விளையாடினால் உங்களால் நான் ரன் குவிக்க முடியாது என்று ஆகாஷ் சோப்ரா அறிவுரை கூறியுள்ளார்.

- Advertisement -