மொத்தம் 15 ரன்.. 10 விக்கெட்.. 7 டக் அவுட்.. 49 எக்ஸ்ட்ராஸ்.. ஆசியன் கேம்ஸில் நடந்த கிரிக்கெட் விநோதம்!

0
694
Asian games

தற்பொழுது சீனாவில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. இதில் கிரிக்கெட்டும் சேர்க்கப்பட்டு இருக்கிறது. ஆனால் குறுகிய வடிவமான டி20 கிரிக்கெட் சேர்க்கப்பட்டு இருக்கிறது!

தற்பொழுது இதற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் ஆண்கள் மற்றும் பெண்கள் இந்திய கிரிக்கெட் அணிகளை அனுப்பி வைக்கிறது.

- Advertisement -

நடப்பு ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் முதலில் பெண்களுக்கான கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பித்திருக்கிறது. இது முடியும் தருவாயில் ஆண்களுக்கான கிரிக்கெட் போட்டிகள் ஆரம்பிக்கும்.

இந்த நிலையில் இன்று மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணியும் இந்தோனேசியா பெண்கள் கிரிக்கெட் அணியும் மோதிக்கொண்ட ஒரு போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியில் முதலில் டாசில் வென்ற மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. ஒருவேளை அப்படி செய்யாமல் இருந்திருந்தால் இந்த போட்டி, மொத்தமாக அரை மணி நேரத்தில் முடிந்திருக்கும். அப்படியான ஒரு வினோத சம்பவம், இந்த போட்டியில் நடந்திருக்கிறது.

- Advertisement -

டாஸ் இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தோனேசிய பெண்கள் கிரிக்கெட் அணி மிகச் சிறப்பாக விளையாடி, 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. எக்ஸ்ட்ராவாக மங்கோலிய பெண்கள் கிரிக்கெட் அணி 49 ரன்கள் தந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு அடுத்து பேட்டிங் செய்ய வந்த மங்கோலியா பெண்கள் கிரிக்கெட் அணியில் மொத்தம் ஏழு வீராங்கனைகள் சேர்ந்து எடுத்த ரன்கள் பூஜ்ஜியம். ஏழு பேர் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. அந்த துவக்க வீராங்கனை ஆக வந்த ஒருவர் ஐந்து ரன்கள் எடுத்திருக்கிறார். அதுவே தனிப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக அமைந்திருக்கிறது.

மங்கோலிய பெண்கள் கிரிக்கெட் அணி 10 ஓவர்கள் முடிவில் 15 ரன்களுக்கு ஆல்அவுட் ஆகி அதிர்ச்சி அளித்திருக்கிறது. முடிவில் இந்தப் போட்டியில் இந்தோனேசிய பெண்கள் கிரிக்கெட் அணி 172 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இருக்கிறது.