நாளை இங்கிலாந்துக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன்.. அஷ்வின் இஷானுக்கு வாய்ப்பு? சிராஜ் ஓய்வு? – முழுமையான அலசல்!

0
3989
Ashwin

நாளை ஞாயிறு லக்னோ மைதானத்தில் இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் விளையாடுகிறது!

இங்கிலாந்து அணியை எடுத்துக் கொண்டால் அந்த அணி அரையிறுதி வாய்ப்பை இழந்துவிட்டது என்று கூறலாம். ஒரு சதவீத வாய்ப்பு மட்டுமே அந்த அணிக்கு இருக்கிறது. ஆனால் அது நடக்க வாய்ப்பில்லாத விஷயம்.

- Advertisement -

இந்திய அணியை எடுத்துக் கொண்டால் 5 போட்டிகளில் விளையாடி ஐந்தையும் வென்று, அரையிறுதிக்கான வாய்ப்பை ஏறக்குறைய உறுதி செய்துவிட்டது. நாளைய போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலக கோப்பை தொடரில் அதிகாரப்பூர்வமாக அரையிறுதிக்குள் நுழைந்த முதல் அணியாக இருக்கும்.

நாளைய போட்டிக்கு இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா காயத்தின் காரணமாக இடம்பெற மாட்டார் என்பது ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. மேலும் அவர் அதற்கடுத்த போட்டியிலும் விளையாட மாட்டார் என்று தெரிகிறது.

போட்டி நடக்க இருக்கும் லக்னோ மைதானத்தை பொறுத்தவரை, ஆடுகளம் சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்று இந்திய முன்னாள் வீரர்களால் கூறப்படுகிறது. இதை வைத்து இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய பிளேயிங் லெவனை அமைக்கும் பொழுது, மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் மற்றும் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்கள் என்று அமையும்.

- Advertisement -

இந்த வகையில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சாளர்களாக கடைசி போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக ஐந்து விக்கெட் கைப்பற்றிய முகமது சமி மற்றும் ஜஸ்பிரித் பும்ரா இருவரும் இடம் பெறலாம். முகமது சிராஜ் ஓய்வு எடுக்கலாம்.

மேலும் இந்திய அணி ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ் மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் என உலகத் தரத்தில் சுழற் பந்துவீச்சு தாக்குதலை அமைக்கும். இப்படி நடைபெறவே வாய்ப்புகள் அதிகம்.

வேகப்பந்து வீச்சிக்கு சாதகமான ஆடுகளம் எனும் பொழுது, இதில் ரவிச்சந்திரன் அஸ்வின் இடத்தில் முகமது சிராஜ் இடம் பெறுவார். இந்த அளவில் மட்டுமே கடந்த ஆட்டத்தில் இருந்து மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நாளை இங்கிலாந்துக்கு எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா, சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கேஎல்.ராகுல், சூரியகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், முகமது சமி, ஜஸ்பிரித் பும்ரா மற்றும் குல்தீப் யாதவ்!