சச்சின், லாரா, பாண்டிங் கூட செய்யாத சாதனை.. செஞ்சுரியனில் சாதித்த கேஎல் ராகுல்.. இத்தனை ரெக்கார்ட்ஸா!

0
390
Rahul

இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. செஞ்சுரியனில் நடைபெற்ரும் வரும் இந்த போட்டியில் இந்திய அணி முதல் நாள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 208 ரன்கள் சேர்த்திருந்தது. இந்திய அணி நட்சத்திர வீரர் கேஎல் ராகுல் 70 ரன்கள் எடுத்து சிராஜ் உடன் களத்தில் இருந்தார்.

இதன்பின் இன்று அதிகாலையும் கனமழை பெய்ததால், ஆட்டம் தொடங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது. இதன்பின் மீண்டும் கேஎல் ராகுல் – சிராஜ் கூட்டணி இரண்டாம் நாள் ஆட்டத்தை தொடங்கியது. சிராஜ் சிறிது நேரம் கேஎல் ராகுலுக்கு கம்பெனி கொடுக்க, மறுமுனையில் கேஎல் ராகுல் பவுண்டரிகளாக விளாசி தள்ளினார்.

- Advertisement -

இதனால் கேஎல் ராகுல் சதம் விளாசுவார் என்ற நம்பிக்கையுடன் ரசிகர்கள் காத்திருந்தனர். தொடர்ந்து கேஎல் ராகுல் 89 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், ரபாடா பந்தில் சிக்சர் அடித்து 95 ரன்களை எட்டினார். இந்த நிலையில் கோட்சியே அட்டாக்கில் கொண்டு வரப்பட்டார். அந்த ஓவரின் முதல் பந்திலேயே சிராஜ் 5 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது.

பின்னர் வந்த பிரசித் கிருஷ்ணாவை நீண்ட நேரம் பந்தை எதிர்கொள்ளவிடாமல், கேஎல் ராகுல் விரைவாக ஓடி ஸ்ட்ரைக்கிற்கு சென்றார். அதன்பின் அந்த ஓவரின் கடைசி பந்தில் சிக்சர் விளாசி தனது 8வது டெஸ்ட் சதத்தை விளாசி தள்ளினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் கேஎல் ராகுல் வெளிநாட்டில் விளாசும் 7வது சதம் இதுவாகும்.

அதேபோல் காயத்திற்கு பின் கேஎல் ராகுல் விளையாடிய முதல் ஒருநாள் போட்டியிலேயே சதம் அடித்த அசத்திய நிலையில், தற்போது முதல் டெஸ்ட் போட்டியிலும் சதம் அடித்து மிரட்டியுள்ளார். அதேபோல் 2021ஆம் ஆண்டு சென்சுரியன் மைதானத்தில் சதமடித்த கேஎல் ராகுல், இந்த போட்டியில் மீண்டும் ஒரு சதம் விளாசி அசத்தியுள்ளார்.

- Advertisement -

இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங், பிரையன் லாரா, விராட் கோலி உள்ளிட்ட ஜாம்பவான் வீரர்கள் கூட செய்யாத சாதனையை கேஎல் ராகுல் படைத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆசியாவை சேர்ந்த பேட்ஸ்மேன்களில் தென்னாப்பிரிக்கா மண்ணில் அதிக சதங்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் சச்சினுக்கு பின் கேஎல் ராகுல் இடம்பிடித்துள்ளார்.

அதேபோல் கடினமான நேரங்களில் சதமடித்த கேஎல் ராகுலுக்கு ரசிகர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். சூழலுக்கு தகுந்தாற் போல் டெய்லண்டர்களுடன் விளையாடி கேஎல் ராகுல் சதமடித்ததன் காரணமாக, சர்வதேச கிரிக்கெட் கேஎல் ராகுல் விளாசிய சதங்களில் இதுதான் சிறந்தது என்று பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.