பயிற்சியில் ஹர்திக் பாண்டியா அபிஷேக் நாயர் பிரச்சனை.. தீர்த்து வைத்த பத்திரிக்கையாளர்.. களத்தில் என்ன நடந்தது?

0
258
Hardik

இந்திய அணி தற்போது இலங்கை சுற்றுப்பயணத்தில் பல்லேகெலே மைதானத்தில் முகாமிட்டு பயிற்சி செய்து வருகிறது. முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கு இந்திய அணியினரின் பயிற்சிகள் மிக தீவிரமாக கம்பீர தலைமையில் செல்கிறது. பயிற்சி அமர்வின் போது பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் மற்றும் ஹர்திக் பாண்டியா இடையே கருத்து வேறுபாடு வந்தது. இதை பத்திரிக்கையாளர் தீர்த்து வைக்க பிரச்சனை சுமூகமாக முடிந்தது

இந்திய டி20 அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக வருவார் என்று எல்லோரும் எதிர்பார்த்த நிலையில் சூரிய குமாரை கேப்டனாக இந்திய கிரிக்கெட் வாரியம் நியமித்தது. இதன் காரணமாக ஹர்திக் பாண்டியா நிச்சயம் ஏமாற்றத்தில் இருப்பார் என பல முன்னாள் வீரர்கள் கூறி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த நிலையில் இலங்கை சுற்றுப்பயணத்தில் முதலில் நடைபெறும் ஒன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மட்டுமே ஹர்திக் பாண்டியா பங்கே இருக்கிறார். தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இருந்து ஓய்வு கேட்டு வாங்கி இருக்கிறார்.

இந்த நிலையில் டி20 தொடரின் மூன்று போட்டிகளும் நடைபெறும் பல்லேகெலே மைதானத்தில் தற்பொழுது இந்திய அணியினர் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். கம்பீர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அறிவிக்கப்பட்டதற்கு பிறகு முதல் முறையாக அவர் இந்திய அணியுடன் இணைந்து இருக்கிறார்.

- Advertisement -

இந்த பயிற்சி அமர்வின் போது முதலில் கில் மற்றும் ஜெய்ஸ்வால் இருவரும் பேட்டிங் பயிற்சியை துவங்கினார்கள். இவர்களுக்கு ஹர்திக் பாண்டியா வந்து வீச ஆரம்பித்தார். துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் அடித்து விளையாடும் படி பயிற்சியாளர்களால் கேட்டுக் கொள்ளப்பட்டார்கள். பின்பு அவர்கள் 40 நிமிடம் பயிற்சி செய்து முடித்தார்கள்.

இதற்கு அடுத்து ஹர்திக் பாண்டியா பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தலைமையில் பேட்டிங் பயிற்சி செய்ய வந்தார். அப்பொழுது ஹர்திக் பாண்டியா பாயிண்ட் திசையில் ஒரு பந்தை அடித்தார். பிறகு அந்த பந்து பவுண்டரி சென்றது என பேட்டிங் பயிற்சியாளர் அபிஷேக் நாயரிடம் கூறினார். ஆனால் அபிஷேக் நாயர் அந்த இடத்தில் ஒரு ஃபீல்டர் கட்டாயம் இருப்பார் எனவும், அங்கு சிவப்பு நிற சட்டையை அணிந்து கொண்டு நிற்கும் ஒருவரது இடத்தில் ஃபீல்டர் வைக்கப்படுவார் எனவும் கூறி பவுண்டரியை மறுத்துவிட்டார்.

இதையும் படிங்க : இந்திய கோச் பதவி இதனால எனக்கு வேணாம்.. யோசித்துதான் நான் இந்த முடிவை எடுத்தேன் – நெஹ்ரா பேட்டி

இதைக் கேட்ட ஹர்திக் பாண்டியா அதை ஏற்றுக் கொள்ளவில்லை. உடனே அபிஷேக் நாயர் சிவப்பு சட்டைக்காரரான பத்திரிக்கையாளரிடம் பந்து பவுண்டரிக்கு சென்று இருக்குமா என்பது குறித்து கேட்கப்பட்டது. அதற்கு அந்த பத்திரிகையாளர் இந்த இடத்தில் ஒரு பீல்டர் இருந்திருந்தாலும் பந்து பவுண்டரிக்கு சென்று இருக்கும் என்று கூறினார். பிறகு அங்கு ஏற்பட்ட டென்ஷன் முடிவுக்கு வர மீண்டும் பயிற்சி தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது!

- Advertisement -