இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் தற்போது புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பது குறித்த முடிவு எடுத்து வருகிறது. இங்கிலாந்து அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் வந்தால் சிறப்பாக இருக்கும். அவரது தலைமையில் அந்த அணி விளையாட தொடங்கினால், இங்கிலாந்து அணியை மற்ற அணிகள் அவ்வளவு எளிதில் கட்டுப்படுத்த முடியாது என்றும் நாசர் ஹுசைன் கூறியுள்ளார்.
கிரிக்கெட் குறித்த வியூகங்கள் அவருக்கு நிறைய தெரியும்
முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் மத்தியில் ரிக்கி பாண்டிங் நிறைய கிரிக்கெட் தந்திரங்கள் மற்றும் வியூகங்களை அறிந்த ஒரு வீரர். அவருக்கு கிரிக்கெட் மீதும் கிரிக்கெட் வீரர்கள் மீதான எண்ணம் மற்றும் யோசனை இருந்து கொண்டே இருக்கும். போட்டி நடைபெறுவதற்கு முன்பாகவும் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலும், அணியின் வெற்றிக்காக சாமர்த்தியமாக செயல்படும் யுக்தியும் அவரிடம் உள்ளது.
எனவே என்னை பொறுத்தவரையில், ரிக்கி பாண்டிங் இங்கிலாந்து அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றால் இங்கிலாந்து அணி வெற்றிப்பாதையில் பயணிக்கும். இங்கிலாந்து அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் எந்தவித யோசனையும் இன்றி ரிக்கி பாண்டிங் சம்மதம் தெரிவித்தால், இங்கிலாந்து நிர்வாகம் உடனடியாக விரைந்து அவரை அந்த பொறுப்பில் அமர்த்த வேண்டும் என்றும் நாசர் ஹுசைன் தற்பொழுது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆஸ்திரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் செய்த சாதனைகள்
2002ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி பொற்கால ஆட்சி செய்தது என்று சொன்னால் அது மிகையாகாது. சுமார் 324 (டெஸ்ட் மற்றும் ஒருநாள் ) போட்டிகளில் அவரது தலைமையிலான ஆஸ்திரேலிய அணி 220 போட்டிகளில் வெற்றி பெற்றது. அவருடைய வெற்றி சதவிகிதம் 67.92 ஆகும்.
அவரது தலைமையில் ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்து அணியை ஆஷஸ் டெஸ்ட் தொடரில் 5-0 என்கிற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து இருக்கிறது. 2003 மற்றும் 2007 என தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி உலகக் கோப்பையும், 2006 மற்றும் 2009 என தொடர்ச்சியாக இரண்டு ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கோப்பையை வென்ற ஒரே கேப்டன் ரிக்கி பாண்டிங் என்பதும் குறிப்பிடத்தக்கது.