தம்பி ஹர்ஷித் உன்ன நான் ரொம்ப விமர்சனம் பண்ணிட்டேன்.. ஆனா நீ அந்த தப்ப செய்யல – ஸ்ரீகாந்த் பாராட்டு

0
101
Harshit

ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக மூன்றாவது ஒருநாள் போட்டியில் பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஹர்ஷித் ராணாவை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பாராட்டி இருக்கிறார்.

ஹர்ஷித் ராணாவுக்கு மூன்று வடிவ இந்திய அணிகளிலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது குறித்து பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கொஞ்சம் கடுமையாகவே விமர்சனம் செய்திருந்தார். தற்போது அவர் இது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

கம்பீரின் செல்லப்பிள்ளை

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கம்பீர் ஐபிஎல் தொடரில் கேகேஆர் அணிக்கு மென்டராக இருந்த பொழுது அதே அணியில் ஹர்ஷித் ராணா இடம்பெற்று விளையாடினார். இதன் காரணமாகவே கம்பீர் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கொடுத்து வருகிறார் என பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் அவருடைய செயல்பாடு கடந்த போட்டிக்கு முன்பு வரையில் மிகவும் சுமாராகவே இருந்து வந்தது. இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் மிகவும் காட்டமான முறையில் தொடர்ந்து இருவர் மீதும் விமர்சனங்கள் வைத்து வந்தார். கம்பீர் இது குறித்து வெளிப்படையாகவே தனது கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.

- Advertisement -

நான் உன்னை விமர்சித்தேன்

இது குறித்து கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் பேசும் பொழுது “ஹர்ஷித்ராணா செயல்பட்ட விதத்தில் அவர் எல்லா பாராட்டுக்கும் தகுதியானவர். அவருடைய வெற்றிக்கு நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஆமாம் நான் உங்களை விமர்சனம் செய்திருக்கிறேன். ஆனால் நீங்கள் கடந்த போட்டியில் சிறப்பாக விளையாடியிருக்கிறீர்கள். இதன் மூலம் அவருக்கு நல்ல தன்னம்பிக்கை கிடைக்கும். அதிலிருந்து அவர் இன்னும் நிறைய சிறப்பாக செயல்பட முடியும்”

இதையும் படிங்க : 90 ஓவரில் மொத்தமாக முடிந்த டெஸ்ட் போட்டி.. 63 வருடம் கழித்து வினோதம்.. ரியான் பராக் அணிக்கு சோகம்

” இரண்டாவது ஒருநாள் போட்டியில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சின் ஆரம்பத்தின் சிறப்பாக இருந்தார். ஆனால் கடைசியில் சிறப்பாக இல்லை. ஆனால் இந்த போட்டியில் பந்துவீச்சில் எல்லா நேரத்திலும் சிறப்பாக இருந்தார். குறிப்பாக கடைசி நேரத்தில் அவர் மெதுவான பந்துகளையும், ஷார்ட் பந்துகளையும் வீசவில்லை. இந்த வகையில் அவர் மிகவும் முன்னேறி வந்திருக்கிறார்” என்று கூறி பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -