பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி பதவி பறிப்பு.. பின்னணியில் இந்திய அணி.. புதிய கேப்டன் யார்?

0
293
Salman

பாகிஸ்தான் டி20 அணியின் இளம் கேப்டன் சல்மான் அலி ஆகா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்படலாம் என்ற பரபரப்பான செய்திகள் வந்து கொண்டிருக்கிறது.

சல்மான் அலி ஆகா தலைமையிலான பாகிஸ்தான் டி20 அணி ஆசியக் கோப்பை தொடரில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இந்திய அணியிடம் தோற்று கோப்பையை இழந்தது. அதற்கு முன்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் யுஏஇ அணிகள் பங்குபெற்ற முத்தரப்பு டி20 தொடரை வென்று இருந்தது.

- Advertisement -

இந்திய அணியின் பின்னணி

2025 ஆசியக் கோப்பை டி20 தொடரில் மொத்தம் மூன்று முறை பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாடியது. இந்த மூன்று போட்டிகளிலுமே பாகிஸ்தான் அணி பெரிய அளவில் சவால் கொடுக்காமல் தோல்வி அடைந்தது. இது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ஏமாற்றம் அடைய வைத்திருக்கிறது.

மேலும் சல்மான் அலி ஆகா ஆசிய கோப்பை தொடரில் மொத்தம் ஏழு போட்டிகளில் விளையாடி 72 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதில் மிகக் குறிப்பாக அவருடைய ஸ்ட்ரைக் ரேட் 80 என்று இருக்கிறது. இது ஒரு நாள் போட்டிக்கே மிகவும் குறைவானதாக பார்க்கப்படுகிறது. இதனால் அவர் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்படுகிறார் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

புதிய கேப்டன் யார்?

இந்த நிலையில் தற்போது பாகிஸ்தான் டி20 அணிக்காக புதிய கேப்டனாக யார் நியமிக்கப்படுவார்கள் என்கின்ற தகவல்களும் வெளியாகி இருக்கிறது. பாகிஸ்தானுக்காக 112 சர்வதேச டி20 போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட சுழல் பந்துவீச்சு ஆல்ரவுண்டர் சதாப் கான் புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று கூறப்படுகிறது.

இதையும் படிங்க : ரோகித் மனசுல எரிகிற தீ என்னனு எனக்கு தெரியும்.. கவிதை மாதிரி அதை பண்ணுவாரு – தினேஷ் கார்த்திக் பேச்சு

இவர் ஏற்கனவே பாகிஸ்தான் டி20 அணிக்கு துணை கேப்டனாக இருந்திருக்கிறார். மேலும் உலகெங்கும் நடக்கும் சில டி20 தொடர்களில் கேப்டனாக செயல்பட்டு வைத்திருக்கிறார். இத்துடன் இவர் லோயர் ஆர்டரில் அதிரடியான பேட்டிங் பங்களிப்பை கொடுக்க கூடியவர். இதனால் பாகிஸ்தான் டி20 அணிக்கு புதிய கேப்டனாக இவரை நியமிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.

- Advertisement -