உலக கோப்பைக்கு இல்லை.. இந்த விஷயத்துக்காகவே ரோஹித் சர்மா தொடர்ந்து விளையாடனும் – முகமது கைப் பேட்டி

0
19

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்த உடன் இந்திய அணி வருகிற 19ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்று ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாட உள்ளது

இந்த சூழ்நிலையில் ரோஹித் ஷர்மா குறித்து இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகமது கைஃப் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு ஒரு நாள் தொடரில் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் வீரரான சுப்மான் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இவர் ஏற்கனவே டெஸ்ட் கிரிக்கெட்டில் கேப்டனாகவும் டி20 கிரிக்கெட்டில் துணை கேப்டன் ஆகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ரோகித் சர்மா அடுத்த ஒரு நாள் உலகக் கோப்பை வரை கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேலையில் இந்திய நிர்வாகத்தின் இந்த முடிவு சற்று ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் ரோஹித் சர்மா அடுத்த உலக கோப்பை வரை விளையாட மாட்டார் எனவும், அவருக்கு ஆஸ்திரேலியா தொடர் தான் கடைசி தொடராக இருக்கும் எனவும் சமூக வலைதளங்களில் செய்திகள் வலம் வருகின்றன. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான முகம்மது கைஃப் இது குறித்து தனது கருத்தை கூறியிருக்கிறார். ரோகித் சர்மா கேப்டனாக இல்லாவிட்டாலும் இந்திய அணியில் ஒரு வீரராக அவருடைய பங்களிப்பு என்பது மிகவும் முக்கியமானது என்று அதற்கான காரணத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது”அவர் நிச்சயமாக ஒரு பாஸ் போல விளையாடுவார். ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவி வேண்டுமானால் பறிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் இந்திய அணியில் ஒரு தொடக்க வீரராக அவர் நிச்சயம் பங்களிப்பார் என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் அணியில் ஒரு அனுபவம் வாய்ந்த பேட்ஸ்மேன் நிச்சயமாக சொல்ல வேண்டும் என்றால் தென்னாப்பிரிக்காவில் நடைபெறும் உலக கோப்பையில் ஒரு இளம் அணியுடன் நீங்கள் செல்லவே முடியாது. சில நேரங்களில் அந்த ஆடுகளங்களில் பந்து அதிகமாக நகரும் ஆடுகளத்தில் உயிர் அதிகமாக இருக்கும். அந்த சூழ்நிலையில் நீங்கள் புதிய வீரர்களை எடுத்தால் அது வேலைக்கு ஆகாது.

இதையும் படிங்க:சச்சின் ரோகித் மெகா ரெக்கார்டை உடைத்த ஜெய்ஸ்வால்.. பிராட்மேன் சாதனைக்கு செக்.. அசத்தல் பேட்டிங்

அதனால்தான் ரோஹித் சர்மாவை போல பவுன்ஸ் பந்துகளை சிறப்பாக கையாளக்கூடிய, அற்புதமாக விளையாடக் கூடிய வீரர்கள் நிச்சயமாக தேவைப்படுகிறார்கள். அந்த வகையான ஆடுகளங்களில் ரோகித் சர்மா நிச்சயம் சிறப்பாக செயல்படுவார் என்று நான் நம்புகிறேன். ஒரு தொடக்க வீரராக அவரது பேட்டிங் பாணி அவருக்கு சிறப்பான வகையில் உதவி செய்யும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -