என் முதல் சதம் போச்சு.. மனதின் குரங்கு ஆசை அப்படி தான்.. ஆனா மகிழ்ச்சி – சாய் சுதர்சன் பேச்சு

0
101
Sai

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தனது முதல் சதத்தை அடிக்க தவறியது குறித்து சாய் சுதர்சன் பேசியிருக்கிறார்.

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் கிடைத்த வாய்ப்பை சாய் சுதர்சன் தவறவிட்டார். இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கட்டாயம் ரன் அடித்தாக வேண்டிய நெருக்கடியில் இருந்தார்.

- Advertisement -

குவிந்த ஆதரவு

இந்த நிலையில் தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் உட்பட பல முன்னாள் வீரர்கள் இன்னொரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்கள். இந்த நிலையில் இன்று இரண்டாவது போட்டியில் கம்பீர் சாய் சுதர்சனுக்கு மீண்டும் வாய்ப்பு கொடுத்தான்.

இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சாய் சுதர்ஷன் ஜெய்ஸ்வால் உடன் இணைந்து 193 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார். மேலும் சிறப்பாக விளையாடி 165 பந்துகளில் 12 பவுண்டரிகள் உடன் 87 ரன்கள் எடுத்தார். துரதிஷ்டவசமாக தனது முதல் சதத்தை அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார்.

- Advertisement -

மனதில் உள்ள குரங்கு

இதுகுறித்து சாய் சுதர்சன் பேசும் பொழுது ” இன்று நான் செயல்பட்ட விதத்தில் நான் உண்மையாகவே நன்றி உள்ளவனாக இருக்கிறேன். ஆனாலுமே உங்கள் மனதில் உள்ள குரங்கு நீங்கள் சதம் அடித்திருக்க வேண்டும் என்று சொல்லும். நான் என்னுடைய முதல் சதத்தை அடிக்க விரும்பினேன். நான் இன்னும் நிறைய ரன்கள் என்னிடம் வரும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என்னால் அது முடியாமல் போய்விட்டது”

இதையும் படிங்க : சச்சின் ரோகித் மெகா ரெக்கார்டை உடைத்த ஜெய்ஸ்வால்.. பிராட்மேன் சாதனைக்கு செக்.. அசத்தல் பேட்டிங்

“மற்றபடி ஜெய்ஸ்வால் உடன் இணைந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைக்க முடிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். இன்று நான் ரன்கள் எடுப்பது குறித்து அதிகமாக யோசிக்கவில்லை. நான் என்னை கொஞ்சம் சுதந்திரமாக வைத்துக் கொண்டேன். இந்த ஆட்டம் எனக்கு சிறப்பாக வந்திருக்கிறது. விஷயங்களை உடனே செய்வதற்கு நினைக்காமல், கொஞ்சம் நேரம் கொடுத்ததால் விஷயங்கள் தானாகவே நடக்க ஆரம்பித்தது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -