7 கேட்ச் விட்டிருக்காங்க.. ஆனா சூரியகுமார் அதை மட்டும் செய்யவே இல்லை.. நீ சூப்பர்பா – முகமது கைப் பேச்சு

0
89
Kaif

இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா போல எப்படி செயல்படுகிறார் என்பது குறித்து முகமது கைஃப் பாராட்டி பேசி இருக்கிறார்.

நேற்று ஆசியக் கோப்பை இரண்டாவது சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிராக 41 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து இந்திய அணி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று இருக்கிறது.

- Advertisement -

மோசமான பீல்டிங்

இந்திய அணி கடந்த இரண்டு போட்டிகளில் மட்டும் மொத்தமாக ஏழு கேட்ச் வாய்ப்புகளை விட்டு இருக்கிறது. இது எதிரணியின் ரன்கள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது. இருந்த போதிலும் இந்திய அணி எளிதாக வெற்றி பெறுவதை எதுவும் தடுக்கவில்லை.

இது குறித்து பேசி உள்ள முகமது கைஃப் கூறும் போது ” நேற்றைய போட்டியில் நான்கு கேட்ச் விடப்பட்டன. ஆனால் நீங்கள் சூரியகுமார் யாதவை பாருங்கள், அவர் எதிர்வினை எப்படி இருக்கிறது என்று பாருங்கள், அவர் எந்த கோபத்தையும் வெளிப்படுத்தவில்லை. அவர் முற்றிலும் நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தார். இந்தியா பாகிஸ்தான் அணிகளுக்கு எதிரான உயர் அழுத்த போட்டியில், பந்துவீச்சு சரியாக இல்லாத போதும் கூட சூரியகுமார் கொஞ்சம் கூட அழுத்தம் அடையவில்லை”

- Advertisement -

ரோஹித் போலவே இருக்கிறார்

“அவர் கோபப்படுவாரா யாரையாவது திட்டுவாரா என்று நான் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் எந்தவிதமான உணர்ச்சியையும் வெளியில் காட்டவில்லை. இது ஒரு கேப்டனாக ரோஹித் சர்மா அணியை வழிநடத்திய விதத்தை காட்டுகிறது. பவுலர்களை ஆதரிப்பது, பீல்டர்களை உற்சாகப்படுத்துவது, அடுத்த கேட்ச் வரும் பிடிக்கலாம் என அவர்களுக்கு கைதட்டுவது என சிறப்பாக இருந்தார்”

இதையும் படிங்க : வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட்.. இந்திய அணி அறிவிப்பு.. ஆச்சரியமான துணை கேப்டன்.. புது தமிழக வீரருக்கு வாய்ப்பு

“சூரியகுமார் ரோஹித் சர்மா போல அமைதியான தலைமைத்துவத்தை வெளிப்படுத்தினார். அவர் 26 போட்டிகளுக்கு கேப்டனாக இருந்திருக்கிறார். அதில் 22 போட்டிகளை வென்று இருக்கிறார். இது கிட்டத்தட்ட வெற்றி சதவீதம் 85 என இருக்கிறது” என்று பாராட்டி இருக்கிறார்

- Advertisement -