வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதில் சில ஆச்சரியமான முடிவுகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
அடுத்த மாதம் அக்டோபர் 2 மற்றும் அக்டோபர் 10ஆம் தேதியில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் செய்ய இருக்கிறது. இந்த நிலையில் இதற்கான இந்திய அணி தேர்வு வெளியிடப்பட்டுள்ளது.
ஆச்சரிய துணை கேப்டன்
இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் ரிஷப் பண்ட் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காலில் காயமடைந்ததில் குணமடையாததால் அவருடைய இடத்திற்கு தமிழகத்தின் விக்கெட் கீப்பர் நாராயணன் ஜெகதீசன் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். அதேசமயத்தில் அவருடைய துணை கேப்டன் பொறுப்பு மூத்த வீரர் ரவீந்திர ஜடேஜாவுக்கு தரப்பட்டிருக்கிறது.
இதற்கு அடுத்து மிக முக்கியமாக நிதீஷ் குமார் ரெட்டி இந்தியாவில் நடைபெறும் டெஸ்ட் தொடருக்கு தேர்ந்தெடுக்கப்பட்டது ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இந்த முறையும் முகமது ஷமிக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. பும்ரா, சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா மூவரும் தொடர்கிறார்கள்.
கருண் நாயர் நீக்கம்
இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பை பயன்படுத்தாத கருண் நாயர் அதிரடியாக நீக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் காயத்தில் இருப்பதால் சர்பராஸ் கான் தேர்வு செய்யப்படவில்லை. மேலும் ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிராக சதம் அடித்த தேவ்தத் படிக்கல் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த அணியில் சுழல் பந்துவீச்சு ஆல்ரண்டர்களாக அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் சுழல் பந்துவீச்சாளராக குல்தீப் யாதவும் தொடர்கிறார்.
இதையும் படிங்க : ஓவர் ஆணவம்.. சூர்யா கம்பீர் செய்யும் பெரிய 2 தவறுகள்.. முக்கிய போட்டியில் நிச்சயம் பாதிப்பு வரும் – ரசிகர்கள் விமர்சனம்
இந்திய டெஸ்ட் அணி :
ஷுப்மான் கில் (கே)
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கேஎல்.ராகுல்
சாய் சுதர்சன்
தேவ்தத் படிக்கல்
துருவ் ஜூரெல் (WK)
ரவீந்திர ஜடேஜா (து.கே)
வாஷிங்டன் சுந்தர்
ஜஸ்பிரித் பும்ரா
அக்ஸர் படேல்
நிதிஷ் குமார் ரெட்டி
என். ஜெகதீசன் (வி.கீ)
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
குல்தீப் யாதவ்






