இந்தியா எங்கள அந்த இடத்திலயே முடிச்சிட்டாங்க.. இனி இலங்கைக்கு வெயிட்டிங் – பாக் கேப்டன் சல்மான் பேச்சு

0
480
Salman

நேற்று ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணியிடம் ஆறு விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து பாகிஸ்தான் கேப்டன் மிகவும் வருத்தத்துடன் பேட்டியளித்திருக்கிறார்.

நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இரண்டாவது சுற்று போட்டியில் இந்திய அணி முதலில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக நேற்று விளையாடியது. இந்தியா அணி வீரர்கள் பல கேட்ச் வாய்ப்புகளை தவற விட்டதால் பாகிஸ்தான் ஐந்து விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்தது.

- Advertisement -

அபிஷேக் கில் ருத்ர தாண்டவம்

இந்த நிலையில் நேற்று இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் பேட்டிங் செய்ய வந்ததிலிருந்து பாகிஸ்தான் பவுலர்கள் வம்புக்கு இழுத்தபடி இருந்தார்கள். இதனால் உசுப்பேறிய இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் வேறு விதமான அதிரடிகள் மிரட்டினார்கள். அபிஷேக் ஷர்மா 24 பந்தில் அரைசதம் அடித்து 39 பந்தில் 74 ரன்கள் கொடுத்தார். கில் 28 பந்தில் 47 ரன்கள் எடுத்தார்.

இந்திய அணி பவர் பிளேவில் 69 ரன்கள் எடுக்க முதல் விக்கெட்டுக்கு 105 ஓவர்களில் 15 ரன்கள் வந்தது. எனவே போட்டியை பவர் பிளேவிலேயே இந்திய துவக்க ஆட்டக்காரர்கள் முடித்து விட்டார்கள். அதற்கு பிறகு இலக்கை நோக்கி விளையாட வேண்டிய தேவை மட்டுமே இருந்தது.

- Advertisement -

நாங்க ஆரம்பிக்கவே இல்லை

இந்த தோல்வி குறித்து பேசி உள்ள பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா “நாங்கள் இன்னும் சரியான ஆட்டத்தை ஆடவே இல்லை. ஆனால் நாங்கள் அதற்கு அருகில் சென்றோம். ஒரு சிறந்த ஆட்டமாக இருந்தது. ஆனால் அவர்கள் போட்டியை எங்களிடமிருந்து பவர் பிளேவிலேயே பறித்து விட்டார்கள். நாங்கள் பேட்டிங் செய்யும்பொழுது பத்து ஓவர்களில் இருந்த நிலைக்கு இன்னும் 10 முதல் 15 ரன்கள் சேர்த்து எடுத்திருக்கலாம். 170 என்பது நல்ல ஸ்கோர் தான். ஆனால் அவர்கள் பவர் பிளேவில் சிறப்பாக விளையாடி விட்டார்கள்”

இதையும் படிங்க : கில் அபிஷேக்கை விட.. இவர் தான் இந்திய அணி வெற்றி பெற மிக முக்கிய காரணம் – இர்பான் பதான் பேட்டி

” எங்களுக்கு இந்திய ஓபனர்கள் விளையாடியது தான் பெரிய வித்தியாசமாக இருந்தது. எங்களுடைய பவுலர்கள் ரன்கள் கொடுக்கிறார்கள். இந்த வடிவ கிரிக்கெட்டில் இது நடக்கத்தான் செய்யும். எங்கள் அணியில் பகார் பேட்டிங் செய்த விதம், பர்கான் பேட்டிங் செய்த விதம், ரவுப் பந்து வீசிய விதம் என சில பாசிட்டிவான அம்சங்கள் இருக்கின்றன. இலங்கைக்கு எதிரான அடுத்த போட்டியை தற்போது எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -