பாகிஸ்தான் ஒரு டீமே கிடையாது.. இந்தியா ஆப்கான் மேட்ச் கூட பாப்பேன்.. இத பார்க்க மாட்டேன் – கங்குலி பேச்சு

0
52
Ganguly

தற்போதைய பாகிஸ்தானை மிகவும் பலவீனமாக இருப்பதாகவும், இந்தியாவுடன் பாகிஸ்தான் அணி விளையாடுவதை பார்க்கப் பெரிய ஈடுபாடு இல்லை எனவும் இந்திய முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார்.

உலக கிரிக்கெட்டில் இந்தியா பாகிஸ்தான் மோதிக் கொள்ளும் போட்டிக்கு இருக்கும் வரவேற்பு வேறு எந்த நாடுகள் விளையாடும் போட்டிக்கும் இறந்தது கிடையாது. இரண்டு நாடுகளும் மோதிக் கொள்ளும் போது இரண்டு நாடுகளின் சாலைகள் வெறிச்சோடி போகும் அளவுக்கு ரசிகர்களின் ஆதரவு இருக்கும். ஆனால் தற்போது அப்படி எதுவும் இல்லை என சௌரவ் கங்குலி கூறியிருக்கிறார்.

- Advertisement -

பாகிஸ்தான் சமமான அணி இல்லை

இதுகுறித்து சௌரவ் கங்குலி பேசும் பொழுது “இந்திய அணிக்கு சமமான அணியாக பாகிஸ்தான் இல்லை. நான் இதை மரியாதையோடு சொல்லிக் கொள்கிறேன். அவர்கள் அணி எப்படி இருக்கிறது என்று நான் பார்த்து வருகிறேன். அவர்களுக்கு தரமான அணி இல்லாததுதான் பிரச்சனை. ஆசியக் கோப்பையின் மற்ற அணிகளை விட இந்தியா பலமாக இருக்கிறது. இந்தியா ஏதாவது போட்டிகளில் தோற்கலாம் ஆனால் மிகச் சிறந்த அணி”

“நான் இந்தியா பாகிஸ்தான் போட்டியை பார்த்ததில் எந்தவித ஆச்சரியமும் கிடையாது. ஆனால் முதல் 15 ஓவர்கள் பார்த்த பிறகு நான் பார்ப்பதை நிறுத்தி விட்டேன். அதற்குப் பிறகு மான்செஸ்டர் யுனைடெட், மான்செஸ்டர் சிட்டி விளையாடிய கால்பந்து போட்டியை பார்த்தேன்”

- Advertisement -

ஆப்கான் கூட ஓகே

“இப்போது இந்தியா பாகிஸ்தான் விளையாடும் பொழுது போட்டித் தன்மை இருப்பதில்லை. நாம் இன்னும் பாகிஸ்தான அணியை பழைய திறமையான வீரர்கள் இருந்த பாகிஸ்தான் அணியாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இன்றைய பாகிஸ்தான் அணி அப்படியானது கிடையாது. இது முற்றிலும் வித்தியாசமாக இருக்கிறது”

இதையும் படிங்க : என் கேப்டன் சூர்யா இல்ல.. இந்த 31 வயது வீரர்தான்.. நான் விக்கெட் எடுக்க காரணமே இவர்தான் – குல்தீப் யாதவ் பேட்டி

” தற்போது இந்த இரு நாடுகள் விளையாடும் போட்டியில் போட்டித் தன்மை இல்லை. இந்தியா ஆஸ்திரேலியா விளையாடும் போட்டியே முதன்மையாக இருக்கிறது. மேலும் இந்தியாவுடன் நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, இலங்கை, ஆப்கான் அணிகள் கூட ஓகே. நாம் தேவையில்லாமல் இந்தியா பாகிஸ்தான் மோதலுக்கு பரபரப்பை கூட்டுகிறோம். ஐந்து ஆண்டுகளாக அப்படி ஒன்றும் கிடையாது. அது படிப்படியாக சிதறிவிட்டது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -