தற்போது ஆசிய சாம்பியனாக இருந்து வரும் இந்திய அணிக்கு நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் பாகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் சுழல் பந்துவீச்சில் கடுமையான சவாலை கொடுக்க இருக்கின்றன.
தற்போது இந்த தொடர் யுஏஇ-ல் மண்ணில் நடைபெற இருக்கிறது. இங்கு சுழல் பந்து வீச்சுக்கு சாதகமான சூழ்நிலை காணப்படுகிறது. இந்த நிலையில் இந்த தொடரின் பெரிய அணிகள் அனைத்துமே சுழல் பந்து வீட்டில் சிறப்பாக இருப்பது போட்டியை அதிகரித்திருக்கிறது.
இந்திய அணியின் பிரச்சனை
தற்போது இந்திய அணியில் சுழல் பந்துவீச்சாளர்களாக குல்தீப் யாதவ், வருண் சக்கரவர்த்தி மற்றும் அக்சர் படேல் ஆகியோர் இடம்பெற்று இருக்கிறார்கள். மேலும் பகுதிநேர சுழல் பந்துவீச்சாளர்களாக அபிஷேக் ஷர்மா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட்டில் பந்து வீசிய அனுபவம் பெரிதாக கிடையாது.
மேலும் தற்போது இந்திய பிளேயிங் லெவனில் வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து விளையாடுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவாக இருக்கிறது. இதன் காரணமாக அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி இருவர் மட்டுமே விளையாடுவது, இந்திய அணியின் சுழல் பந்துவீச்சு பலத்தை குறைப்பதாக அமைகிறது.
மற்ற அணிகளின் பலன்கள்
தற்போது பாகிஸ்தான் அணிக்கு இடதுகை சுழல் பந்துவீச்சாளர் புதியவர் சுபியான் கவனிக்க கூடியவராக இருக்கிறார். மிஸ்டரி ஸ்பின்னர் அப்ரார் அகமது, பகுதி நேர சுழல் பந்துவீச்சில் சிறப்பானவராக கேரம் பால் வீசக்கூடிய சையும் அயூப் ஆகியோர் இருக்கிறார்கள். இவர்களுடன் பகுதிநேர புழல் பந்துவீச்சாளர்கள் கேப்டன் சல்மான் அலி ஆகா, குல்தீஷ் ஷா ஆகியோரும் பலம் சேர்க்கிறார்கள்.
இலங்கை அணியை பொறுத்தவரையில் ஹசரங்கா, மதிஷா தீக்சனா இரண்டு உலகத் தரம் வாய்ந்த சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். மேலும் இரு கைகளிலும் பந்து வீசக்கூடிய கமிந்து மெண்டிஸ், மேலும் கேப்டன் ஷரீத் அசலங்கா பகுதி நேர ஆப்ஸ்பின்னராக வந்து வீச முடியும்.
இதையும் படிங்க : என்னை விட பும்ரா சிறந்த பவுலரா?.. விக்கெட் எடுக்கிறது இப்ப ரொம்ப ஈசி – வாசிம் அக்ரம் வெளிப்படை பதில்
மேலும் இந்த மூன்று அணிகளுக்கும் சவால் விடும் வகையில் ஆப்கானிஸ்தான் அணியில் ரஷித் கான், முகமது நபி, முஜீப் ரஹ்மான், மிஸ்டரி ஸ்பின்னர் அல்லா கசன்பர், மேலும் சிஎஸ்கே நூர் அகமத் என மிகச் சிறப்பான நான்கு சுழல் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள். இவர்களில் உறுதியாக மூன்று பேர் விளையாடுவார்கள். ஆப்கானிஸ்தான் அணி இந்த முறை மற்ற அணிகளுக்கு பெரிய சவாலாக இருக்கும் என கணிக்கப்பட்டிருக்கிறது.






