பாண்டிச்சேரி கிரிக்கெட்டை லேசாக எடுத்து கொண்டார்.. வசீம் ஜாபர் அண்ணன் மகனின் ஒப்பந்தம் ரத்து..தந்தை பதிலடி

0
63

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான வசீம் ஜாபரின் அண்ணன் மகன் ஆர்மான் ஜாஃபர், வரவிருக்கும் 2025-26 உள்நாட்டு கிரிக்கெட்  தொடரில் பாண்டிச்சேரி மாநிலத்திற்காக விளையாடுவதற்கு தயாராக இருந்தார். ஆனால், மாநிலங்களுக்கு இடையேயான பயிற்சி போட்டிகளில் விளையாட மறுத்தது, பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத்திற்கு  பிடிக்கவில்லை.

இதன் விளைவாக, அவரது ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது. பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கம் ஆர்மானை நீக்கி, அவருக்கு பதிலாக ஹரியானாவைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஜெயந்த் யாதவை ஒப்பந்தம் செய்துள்ளது. 35 வயதான ஜெயந்த் யாதவ், ஆறு டெஸ்ட் போட்டிகளிலும், இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் விளையாடிய அனுபவமிக்க வீரர் ஆவார்.

- Advertisement -

ஆர்மான் ரெக்கார்ட்:

சீசனுக்கு முந்தைய பயிற்சி ஆட்டத்தில், ஆர்மான் பாண்டிச்சேரியில் விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அவர் அதற்கு பதிலாக இங்கிலாந்தில் உள்ள ஒரு கிளப் அணிக்காக விளையாடுவதைத் தேர்ந்தெடுத்தார். இதனால், வரவிருக்கும் உள்நாட்டு சீசனில் அவரது பெயர் அணியிலிருந்து நீக்கப்பட்டது.

26 வயதான ஆர்மான், மும்பை கிரிக்கெட் சங்கத்தின் அனுமதி  பெற்று, இங்கிலாந்தில் உள்ள விட்சன் கிரிக்கெட் கிளப்பிற்காக யார்க்ஷயர் சாம்பியன்ஸ் லீக்கில் விளையாடி வருகிறார். அவர் 15 முதல் தர போட்டிகளில் விளையாடி, மூன்று சதங்களும் ஒரு அரைசதமும் உட்பட 769 ரன்கள் எடுத்துள்ளார். ஒரே ஒரு டி20 போட்டியில் 27 ரன்களும், 15 லிஸ்ட் A போட்டிகளில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரைசதங்களுடன் 546 ரன்களை 42 என்ற சராசரியில் எடுத்துள்ளார்.

- Advertisement -

பாண்டிச்சேரி கிரிக்கெட்டை லேசாக எடுத்துகொண்டார்:

ஆர்மான், ஆகஸ்ட் 10 முதல் பாண்டிச்சேரியில் நடைபெற்ற மாநிலங்களுக்கு இடையேயான ஒருநாள் போட்டிக்கு முன் வந்திருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார். ஆனால், அவர் இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் விளையாடுவதைத் தேர்ந்தெடுத்தார். எங்கள் மற்ற வீரர்களும் இங்கிலாந்தில் கிளப் கிரிக்கெட் விளையாடுகிறார்கள், ஆனால் அவர்கள் அனைவரும் சீசனுக்கு முன்பு விளையாடிவிட்டு திரும்பி வந்துவிட்டனர்,” என்று தேர்வாளர்கள் கூறினர்.

“ஆர்மான் சீசன் முன்பு நடைபெற இருந்த போட்டிகளில் விளையாட மறுத்தது எங்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அவர் பாண்டிச்சேரி கிரிக்கெட்டை இலேசாக எடுத்துக்கொண்டார். ரஞ்சி டிராபியில் அவருக்கு சிறந்த சாதனை இல்லை என்றாலும், மும்பை கிரிக்கெட் வீரர் என்பதால் அவரது திறமையை நம்பி அவரை தேர்ந்தெடுத்தோம்.”

“ஆனால், இப்போது நாங்கள் ஜெயந்த் யாதவை ஒப்பந்தம் செய்துள்ளோம். ஜெயந்த், 2025 சீச்செம் டிராபிக்காக நடைபெறும் டெஸ்ட் போட்டியில் உடனடியாக விளையாட ஒப்புக்கொண்டார்,” என்று தேர்வாளர்கள் கூறினர். இதனிடையே, இது குறித்து விளக்கம் அளித்துள்ள ஆர்மானின் தந்தை கலிம் ஜாஃபர், “ஆர்மான் பிப்ரவரியில் இங்கிலாந்து கிளப்பிற்காக ஒப்பந்தம் செய்திருந்தார்.”

பாண்டிச்சேரிக்கு தான் இழப்பு:

“இது பாண்டிச்சேரி சங்கம், சீசனுக்கு முன் நடைபெற இருந்த ஆட்டங்களுக்கு விளையாட வேண்டும் என்று கேட்டுக்கொண்டதற்கு முன்பு நடந்தது. பாண்டிச்சேரியின் மின்னஞ்சல் ஜூலை 22 அன்று வந்தது. மேலும் ஆர்மான் மே மாதத்தில் பாண்டிச்சேரிக்காக விளையாட ஒப்பந்தம் செய்திருந்தார்” என்று கலிம் கூறினார்.கலிம், பாண்டிச்சேரி கிரிக்கெட் சங்கத்திடம் ஆர்மானுக்கு இங்கிலாந்து கிளப்பிற்கான கடமைகளை முடிக்க அவகாசம் கேட்டதாகவும், ஆர்மான் ஆகஸ்ட் 26 முதல் பாண்டிச்சேரியின் பயிற்சி ஆட்டங்களில் விளையாட இந்தியாவுக்கு திரும்புவதற்கு டிக்கெட்டுகளை முன்பதிவு செய்திருந்ததாகவும் கூறினார்.

இதையும் படிங்க: என்னுடைய ரோல் மாடல் என் அப்பா தோனி ரோகித் யாரும் இல்லை.. இவர்தான் எப்பவும் – சேவாக் மகன் பேச்சு

ஆனால், ஆகஸ்ட் 24 அன்று ஆர்மானின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டது.பாண்டிச்சேரியின் இழப்பு, ஆர்மானின் இழப்பு இல்லை. ஆர்மான் வரவிருக்கும் இந்திய உள்நாட்டு சீசனில் எந்த அணிக்காகவும் விளையாடாமல் இருக்கும் அபாயம் இருந்தாலும், கலிம் ஜாஃபர் மூன்று முதல் நான்கு உள்நாட்டு அணிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகக் கூறினார்.

- Advertisement -