இங்கிலாந்து அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் களமிறங்கியுள்ளது. அப்போதுதான் தொடர் இரண்டுக்கு இரண்டு என்ற கணக்கில் சமனில் முடிவடையும்.
இந்த நிலையில் ஆடுகளம் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருக்கிறது. இதில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டிருக்கிறது. தொடக்க வீரராக களம் இறங்கிய ஜெய்ஸ்வால், இரண்டு ரன்களிலும், ராகுல் 14 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர்.
2 விக்கெட் இழந்த இந்தியா:
சாய் சுதர்சன் மற்றும் கில் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். மதிய நேர உணவு இடைவெளியின் போது இந்திய அணி 23 ஓவர் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 72 ரன்கள் எடுத்திருக்கின்றது. இந்த நிலையில் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருப்பதால், இந்த போட்டி சமனில் முடிவடையாது என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த டெஸ்டில் முடிவில் ஒன்று இங்கிலாந்து வெற்றி பெறும், இல்லையென்றால் இந்தியா வெற்றி பெறும் என்ற நிலை தான் இருக்கின்றது. ஆனால் மழை மட்டும் குறிக்கிடாமல் இருக்க வேண்டும். இந்த தருணத்தில் இந்திய அணி முதல் இன்னிங்சில் பெரிய இலக்கை நிர்ணயிக்க வேண்டும். குறைந்தபட்சம் இந்திய அணி 350 ரன்கள் யாவது தொட வேண்டும்.
எவ்வளவு ரன் அடிக்கனும்:
ஆடுகளம் வேகப்பந்துவீச்சு சாதகமாக இருப்பதால் 350 ரன்கள் என்பது நல்ல இலக்காக கருதப்படும். ஆனால் வெற்றி பெற வேண்டும் என்றால் 450 ரன்களுக்கு மேல் குவிக்க வேண்டும். ஆனால் அது கடினம் என்று கருதப்படுகிறது. சாய் சுதர்சன் தனது கவுண்டி கிரிக்கெட்டில் இதே மைதானத்தில் தான் நிறைய போட்டிகளில் விளையாடி இருக்கின்றார்.
இதையும் படிங்க: 5வது டெஸ்ட்.. தவறு செய்ததா இந்திய அணி? கம்பீர் எடுத்த முடிவுக்கு காரணம் என்ன?
இதனால் அவருடைய இன்னிங்ஸ் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. இதனிடையே, இந்திய அணியில் நட்சத்திர வீரரான ஜெய்ஷ்வால் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரை சதம் என 220 ரன்கள் அடித்திருந்தார். ஆனால் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இருந்து அவர் தொடர்ந்து தடுமாறி வருகிறார். கடைசியாக விளையாடிய ஐந்து இன்னிங்சில் மொத்தமாகவே அவர் 73 ரன்கள் தான் அடித்து இருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.






