தெ.ஆ ODI டி20 தொடர்.. ஆஸி அணிகள் அறிவிப்பு.. கேப்டன் அதிரடி மாற்றம்.. ஒருநாள் கிரிக்கெட் சோகம்

0
181
Australia

ஆஸ்திரேலியா அணி அடுத்த மாதம் தென் ஆப்பிரிக்கா சென்று தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடர்களில் விளையாடுகிறது. தற்போது இதற்கான ஆஸ்திரேலியா அணிகள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.

இதற்கு முன்பாக மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் மற்றும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்கு வெஸ்ட் இண்டீஸ் சென்று இரண்டு தொடர்களையும் முழுமையாக வென்று ஆஸ்திரேலியா நாடு திரும்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

ஆஸி ஒருநாள் அணியின் சோகம்

இந்த ஆண்டு பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி முடிவடைந்ததும் ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்மித் ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இதற்கு முன்பாகவே ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து மார்க்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வை அறிவித்து வெளியேறினார்.

இந்த நிலையில் தற்போது அறிவிக்கப்பட்டிருக்கும் ஆஸ்திரேலியா ஒருநாள் அணியில் கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் யாரும் இடம் பெறவில்லை. மேலும் டி20 அணி மட்டுமல்லாது ஒருநாள் அணிக்கும் மிச்சல் மார்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். ஒருநாள் அணியில் ஸ்மித் இல்லாததால் லபுசேன் வாய்ப்பு பெற்று இருக்கிறார்.

- Advertisement -

தொடர் அட்டவணை மற்றும் அணிகள்

இதில் முதலில் நடைபெறும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஆகஸ்ட் 10, 12, 16 ஆகிய தேதிகளிலும், அடுத்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் ஆகஸ்ட் 19, 22, 24 ஆம் தேதிகளிலும் நடக்கிறது.

ஆஸி டி20 அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சீன் அபோட், டிம் டேவிட், பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மாட் குஹ்னெமன், க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட் மற்றும் ஆடம் ஜாம்பா.

இதையும் படிங்க : 5வது டெஸ்ட்.. உத்தேச இந்திய பிளேயிங் XI.. அதிரடியான பல மாற்றங்கள்.. தொடரை சமன் செய்ய முடியுமா?

ஆஸி ஒருநாள் அணி: மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், அலெக்ஸ் கேரி, பென் டுவார்ஷுயிஸ், நாதன் எல்லிஸ், கேமரூன் கிரீன், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், மார்னஸ் லாபுசாக்னே, லான்ஸ் மோரிஸ், மிட்செல் ஓவன், மேத்யூ ஷார்ட் மற்றும் ஆடம் ஜாம்பா.

- Advertisement -