நான் கேப்டனா இருந்தா ஸ்டோக்ஸ்க்கு வேற பாடம் நடத்தி இருப்பேன்.. பாஸ் ரெட்ட வேஷம் போடாதீங்க – அஸ்வின் விமர்சனம்

0
222
Ashwin

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிராவில் முடித்துக் கொள்ள விரும்பாத போது, இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் நடந்து கொண்ட விதத்திற்கு, இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

இந்த நிகழ்வுக்காக இந்திய அணியின் முடிவுக்கு குறித்து இங்கிலாந்து தரப்பில் இருந்து விமர்சனங்கள் செய்யப்பட்டு வருகிறது. இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டை அவமதித்துவிட்டதாக இங்கிலாந்து தரப்பில் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஸ்டோக்ஸ் நடந்து கொண்ட விதத்திற்கு ரவிச்சந்திரன் அஸ்வின் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

டபுள் ஸ்டாண்டர்ட் தெரியுமா?

இது குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் பேசும்பொழுது ” டபுள் ஸ்டாண்டர்ட் என்றால் என்னவென்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நேற்று நடந்த விதத்தால் நீங்கள் விரக்தி அடைந்ததாக சொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் நூறு ரன்கள் அடிக்கவும் அனுமதிக்கவில்லை. அதே சமயத்தில் களத்தில் அழுதுவிட்டும் செல்கிறீர்கள். பாஸ் அவர்கள் அந்த சதத்திற்காக நாள் முழுவதும் உழைத்திருக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது அதை உங்களுக்காக விட்டு விட்டு போக முடியுமா?”

“இங்கே பாருங்கள் ஜடேஜா நூறு ரன்கள் எடுப்பதை தடுக்க நீங்கள் எந்த பந்துவீச்சாளர்களை வேண்டுமானாலும் கொண்டு வாருங்கள். அவர் அதற்கு எந்த மறுப்பையும் உங்களிடம் சொல்லவில்லை. நீங்கள் புரூக்கை வைத்து பந்து வீசுவது உங்களுடைய விருப்பம். கிரிக்கெட் விதி இரண்டு கேப்டன்களும் சம்மதித்தால் டிராவில் முடித்துக் கொள்ளலாம் என்றுதான் சொல்கிறது. ஆனால் டிராவுக்கு இந்தியா அந்த நேரத்தில் தயாராக இல்லை”

- Advertisement -

ஸ்டோக்ஸ் ஏன் அப்படி நடந்து கொண்டார்?

“ஸ்டோக்ஸ் நேற்று சீக்கிரத்தில் களத்தை விட்டு வெளியேற விரும்பினார். ஏனென்றால் தனது பந்துவீச்சாளர்களை மேலும் சோர்வடைய வைக்க அவர் விரும்பவில்லை. அடுத்து நான் மகிழ்ச்சியாக இல்லை விரக்தியாக இருக்கிறேன் எனவே நீங்களும் மகிழ்ச்சியாக இருக்கக் கூடாது என்று நினைத்தார்”

இதையும் படிங்க : ஸ்டோக்ஸ் கெட்டுப் போன குழந்தை மாதிரி நடந்துக்கிட்டார்.. இதை அப்படி செய்திருக்கணும் – மஞ்ச்ரேக்கர் விமர்சனம்

“இதனால் நீங்களும் சதம் அடிக்க கூடாது என்று அவர் நினைத்துக் கொண்டார். சதம் என்பது சோதனை ரன்கள். நீங்கள் அதை பெற வேண்டும் என்று நினைக்கிறீர்கள். பெறுவதற்கு அவர்கள் தகுதியானவர்கள். நான் கேப்டனாக இருந்தால் மீதமிருக்கும் 15 ஓவர்களையும் விளையாட வைத்திருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -