நீங்க சதத்தை விட்டுக் குடுப்பீங்களா?.. ரொம்ப நல்லவங்க மாதிரி பேச வேணாம் – கம்பீர் கடுமையான கோபம்

0
805
Gambhir

நேற்று நான்காவது டெஸ்ட் போட்டியை முன்கூட்டியே டிரா செய்ய ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் சமாதிக்காதது குறித்து இங்கிலாந்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு இந்திய பயிற்சியாளர் கம்பீர் கடுமையான முறையில் பதில் அளித்திருக்கிறார்.

இந்த போட்டியில் ஐந்தாவது நாளான நேற்று கடைசி ஒரு மணி நேரத்தில் போட்டியை முடித்துக் கொள்ள இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் விரும்பி கைக்குலுக்க வந்தார். ஆனால் இந்திய பேட்ஸ்மேன்கள் ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் இதை ஏற்றுக் கொள்ளவில்லை. அப்போது அவர்கள் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இங்கிலாந்து வீரர்கள் விமர்சனம்

இந்த நிலையில் பென் ஸ்டோக்ஸ் தங்களுடைய கடைசிக் கட்ட பகுதி நேர பந்துவீச்சாளர்களான ஜோ ரூட் மற்றும் ஹாரி புரூக் இருவரையும் பந்து வீச வைத்தார். இதைத்தொடர்ந்து ரவீந்திர ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவரும் சதம் அடித்தார்கள். மேலும் இது வாஷிங்டன் சுந்தருக்கு முதல் சர்வதேச டெஸ்ட் சதம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டின் அடிப்படையை சிதைப்பதாக இந்த சம்பவம் அமைந்துள்ளதாகவும், தனிப்பட்ட சாதனைகளுக்கு விளையாடுவது சரி இல்லை என்றும், இந்திய அணி நிர்வாகத்தின் மீது விமர்சனம் வைத்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

கம்பீர் தந்த பதிலடி

இது குறித்த இங்கிலாந்து பத்திரிக்கையாளர் கேள்விக்கு பதில் அளித்த கம்பீர் “ஒருவர் 90 ரன்னிலும் மற்றொருவர் 85 ரன்னிலும் பேட்டிங் செய்து கொண்டிருக்கும் பொழுது அவர்கள் சதம் அடிக்க தகுதியானவர்களா இல்லையா? இதுவே இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் 90 ரன்னில் பேட்டிங் செய்து கொண்டிருந்தால், அவர்கள் தங்களுடைய முதல் டெஸ்ட் சதத்தை அடிக்கும் வாய்ப்பில் இருந்தால், நீங்கள் அவர்களை சதம் அடிக்க அனுமதித்திருப்பீர்கள்தானே?!”

இதையும் படிங்க : புரூக் பந்துல சதம் அடிக்க போறியா ஜடேஜா?.. இதெல்லாம் திறமையா.. ஸ்டோக்ஸ் தெரிவித்த கருத்து

“பாருங்கள் இது அவரவர் விருப்பம் சம்பந்தப்பட்டது. அவர்கள் இப்படி தொடர்ந்து விளையாட விரும்பினால் அது அவர்களுடைய விருப்பம். மேலும் ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருமே இந்த சதங்களுக்கு தகுதியானவர்கள் என்று நான் நினைக்கிறேன். இறுதியாக அவர்களுக்கு அது கிடைத்துவிட்டது” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -